பன்னீர் 65 மழை காலத்தில் மாலை வேலையில் சாப்பிட சிறந்த ஒரு ஸ்னாக். மற்ற 65 போன்று பன்னீர் 65 மிக ருசியாக இருக்கும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவில் பன்னீர் 65 எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.
.
பன்னீர் 65 செய்ய தேவையான பொருட்கள்:
பன்னீர் – 200 கிராம்
கார்ன் மாவு – 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் –தேவையான அளவு
எலுமிச்சை சாறு – சிறிதளவு
சமைக்க ஆகும் நேரம் – 10 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 3
பன்னீர் 65 செய்முறை:
முதலில் ஒரு பவுலில் கார்ன் மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள் மற்றும் நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு அதனுடன் உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். பிறகு அதனுடன் சின்ன சின்ன துண்டுகளாக பன்னீர் சேர்த்து கலந்து வைக்கவும்.
5 நிமிடத்திற்கு பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நாம் கலந்து வைத்துள்ள பன்னீரை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பன்னீர் 65 தயார்.
