*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_மார்கழி 18_*

*_03.01.2020_*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கான சாதகமான சூழல் அமையும். தந்தைவழி தொழிலால் நற்பெயர் கிடைக்கும். தெய்வ காரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : சாதகமான நாள்.

பரணி : நற்பெயர் கிடைக்கும்.

கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான புதிய முதலீடுகள் உண்டாகும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

ரோகிணி : ஒற்றுமை அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். தாய்வழி உறவுகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

திருவாதிரை : முன்னேற்றம் உண்டாகும்.

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

முயற்சிக்கேற்ற இலாபம் உண்டாகும். பணியில் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். பயணங்களில் கவனத்துடன் செல்லவும். தாய்மாமன் உறவுகளால் அனுகூலம் உண்டாகும். இளைய உடன்பிறப்புகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : இலாபம் உண்டாகும்.

பூசம் : தனவரவு மேம்படும்.

ஆயில்யம் : கனிவு வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

வாக்குறுதிகளை தவிர்க்கவும். வீண் அலைச்சல்களால் சோர்வு உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்கவும். கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மகம் : சோர்வு உண்டாகும்.

பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திரம் : நிதானத்துடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகலாம். தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். புதிய வேலையாட்களை நியமிப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகலாம்.

அஸ்தம் : எண்ணங்கள் மேலோங்கும்.

சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தொழிலில் செய்த புதிய முயற்சிக்கான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும்.

சுவாதி : கவனம் வேண்டும்.

விசாகம் : இடமாற்றம் நேரிடலாம்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

பிள்ளைகளின் ஆதரவால் தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். விருந்துகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : இலாபம் உண்டாகும்.

அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.

கேட்டை : எண்ணங்கள் மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்து இலாபம் அடைவீர்கள். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். மனை தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : கலகலப்பான நாள்.

பூராடம் : இலாபம் உண்டாகும்.

உத்திராடம் : முன்னேற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

சந்தேக உணர்வால் நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : மாற்றம் உண்டாகும்.

திருவோணம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

அவிட்டம் : செலவுகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

பிள்ளைகள் உங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்கள். தொழில் சம்பந்தமான புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து பழைய பிரச்சனைகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

அவிட்டம் : ஆசைகள் நிறைவேறும்.

சதயம் : வெற்றி அடைவீர்கள்.

பூரட்டாதி : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

கால்நடைகளால் எண்ணிய இலாபம் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். உயர்கல்வி சம்பந்தமான பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

பூரட்டாதி : இலாபம் உண்டாகும்.

உத்திரட்டாதி : வழிகாட்டுதல் கிடைக்கும்.

ரேவதி : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•