*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_கார்த்திகை 04_*
*_20.11.2019_*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
பூர்வீகச் சொத்துக்களின் மூலம் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் சார்ந்த வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆன்மிகம் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வுகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும்.
பரணி : லாபம் அதிகரிக்கும்.
கிருத்திகை : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தடைபட்டு வந்த பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத செய்திகளால் விரயச் செலவுகளும், அலைச்சலும் ஏற்படும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். மனை சார்ந்த விவாதங்களில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : கவனம் தேவை.
ரோகிணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வர்த்தகம் சம்பந்தமான செயல்பாடுகளில் எதிர்பார்த்த சாதகமான சூழல் உண்டாகும். மனைவியின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளுக்கு ஆதரவும், அதற்கான வழிகாட்டுதலும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மிருகசீரிஷம் : முயற்சிகள் ஈடேறும்.
திருவாதிரை : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
வாடிக்கையாளர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடன் உதவிகள் சாதகமாக அமையும். சந்தேக உணர்வினால் நெருக்கமானவர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சம்பந்தமான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், அதற்கு தகுந்த பாராட்டுகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : மாற்றம் உண்டாகும்.
பூரம் : லட்சியம் பிறக்கும்.
உத்திரம் : பாராட்டுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
வாகனங்களில் சில மாற்றங்களை செய்து மனம் மகிழ்வீர்கள். உறவினர்களுடன் வெளியூர் சென்று வருவதற்கான சூழல்கள் அமையும். அருள் தரும் வேள்விகளில் பங்கு பெற்று மன நிம்மதி பெறுவீர்கள். புதிய துறை சார்ந்த ஆலோசனைகள் மற்றும் பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : மன நிம்மதி பெறுவீர்கள்.
சித்திரை : வழிகாட்டுதல் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
மனதில் புதிய ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடலில் ஏற்பட்டிருந்த சில பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். உயரமான இடத்திற்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நிதானத்துடன் செயல்பட்டால் எண்ணிய செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
சுவாதி : சுபிட்சம் உண்டாகும்.
விசாகம் : அமைதி வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
குடும்பத்தில் பொருளாதார நிலை மேம்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவிகள் சாதகமாக அமையும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத சில செயல்களின் மூலம் மாற்றமும், லாபமும் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : பொருளாதாரம் மேம்படும்.
அனுஷம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
கேட்டை : வாய்ப்புகள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். கௌரவப் பதவிகளின் மூலம் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். மகான்களின் தரிசனம் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். நிர்வாகம் சம்பந்தமான பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூராடம் : செல்வாக்கு மேம்படும்.
உத்திராடம் : ஆதரவான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
வெளியூர் தொடர்பான பயண அலைச்சல்கள் அதிகரிக்கும். சிறு சிறு விஷயங்களுக்காக விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது சிந்தித்து செயல்பட வேண்டும். கால்நடைகளிடம் சற்று கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
திருவோணம் : சிந்தித்து செயல்படவும்.
அவிட்டம் : கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
மூத்த உடன்பிறப்புகளின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். இணையம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வேளாண்மை சம்பந்தமான தொழிலில் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
சதயம் : லாபம் மேம்படும்.
பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் அகலும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
சுயதொழிலை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகள் கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சொந்த ஊர் செல்வதற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசு தொடர்பான காரியங்களில் நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
ரேவதி : நிதானத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
