*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஐப்பசி 28_*

*_14.11.2019_*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறி அகலும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் எண்ணிய லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.

பரணி : இழுபறி அகலும்.

கிருத்திகை : லாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

தொழில் சார்ந்த முடிவுகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை முடிப்பதில் நிதானம் வேண்டும். குடும்ப சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவீர்கள். கணவன்- மனைவிக்கிடையே சிறு விவாதங்கள் தோன்றி மறையும். ஆன்மிக பணிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : கவனம் தேவை.

ரோகிணி : நிதானம் வேண்டும்.

மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கத்து வீட்டார்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

மிருகசீரிஷம் : முயற்சிகள் ஈடேறும்.

திருவாதிரை : ஆதாயம் உண்டாகும்.

புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வேற்று மதத்தவர்களின் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். விருப்பமான இடங்களுக்கு சென்று மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

புனர்பூசம் : ஆசைகள் நிறைவேறும்.

பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

ஆயில்யம் : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

விலை உயர்ந்தப் பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் நினைத்த செயல்களை அலைந்து திரிந்து செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். வியாபாரம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் பணிகளை செய்யும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

மகம் : விருப்பங்கள் நிறைவேறும்.

பூரம் : உதவிகள் கிடைக்கும்.

உத்திரம் : நிதானம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களின் மத்தியில் புகழ் மற்றும் கௌரவம் உயரும். சொத்துப் பிரச்சனைகளில் நல்ல தீர்வு கிடைக்கும். வாகன வசதி பெருகும். உத்தியோகத்தில் தலைமை அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். பழையக்கடன் பிரச்சனைகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

அஸ்தம் : தீர்வு கிடைக்கும்.

சித்திரை : இன்னல்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

செய்யும் செயல்களில் கவனமாக இருப்பது நல்லது. பயணங்கள் சார்ந்த காரியங்களில் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : கவனம் வேண்டும்.

சுவாதி : மாற்றம் பிறக்கும்.

விசாகம் : அமைதி வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படலாம். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் உறவு மேம்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். உங்களின் கருத்திற்கு ஆதரவு பெருகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.

அனுஷம் : உறவுகள் மேம்படும்.

கேட்டை : ஆதரவு பெருகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. முக்கிய முடிவுகளில் மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுக்கவும். நிலுவையில் இருந்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். உத்தியோகம் தொடர்பான செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மூலம் : அனுசரித்து செல்லவும்.

பூராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

உத்திராடம் : இடமாற்றம் உண்டாகலாம்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

உணர்ச்சிவசப்படாமல் விவேகத்துடன் செயல்படவும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

உத்திராடம் : விவேகத்துடன் செயல்படவும்.

திருவோணம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அவிட்டம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

தொழில் மற்றும் வியாபாரம் சார்ந்த பயணங்கள் கைகூடும். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சுபச்செயல்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : பயணங்கள் கைகூடும்.

சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி : புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

பிள்ளைகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைபட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். குடும்ப பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : கனிவு வேண்டும்.

உத்திரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.

ரேவதி : விருப்பங்கள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•