*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஐப்பசி 27_*
*13.11.2019*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
குடும்ப நபர்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்விகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த சாதகமான வாய்ப்புகளை கிடைக்கப்பெறுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
அஸ்வினி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
பரணி : முன்னேற்றமான நாள்.
கிருத்திகை : லாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
எதிர்பாலின மக்களால் நற்பயன்கள் உண்டாகும். மனதில் எண்ணிய எண்ணங்களில் இருந்துவந்த தடைகள் அகலும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்புகள் வரும். மனதில் புது வகையான தேடல் பிறக்கும். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த லாபம் காலதாமதமாக கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
கிருத்திகை : நற்பயன்கள் உண்டாகும்.
ரோகிணி : தடைகள் அகலும்.
மிருகசீரிஷம் : தேடல் பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
புதிய முயற்சிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். காது சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். பணிபுரியும் இடங்களில் இனிமையான சூழல் உண்டாகும். புதிய செயல் திட்டங்கள் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
திருவாதிரை : இன்னல்கள் குறையும்.
புனர்பூசம் : இனிமையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
வாக்குவன்மையால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளின் வேகம் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் ஆதாயமான சூழல் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : பாராட்டப்படுவீர்கள்.
பூசம் : துரிதம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
உடன்பிறப்புகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து சாதகமான பலன்கள் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் உயர் அதிகாரிகளால் சாதகமான சூழலும், பாராட்டுகளும் கிடைக்கும். சுயதொழில் சார்ந்த புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : எதிர்ப்புகள் குறையும்.
உத்திரம் : பாராட்டுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
பணிபுரியும் இடங்களில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் மனமகிழ்ச்சி உண்டாகும். மனதில் பலவிதமான எண்ணங்கள் உதயமாகும். பிறருக்கு உதவும்போது சற்று கவனத்துடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : நிதானம் வேண்டும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
செய்யும் செயல்களில் அவ்வப்போது மந்தத்தன்மை ஏற்பட்டு காலவிரயம் உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஈடுபடும்போது சற்று நிதானத்துடன் செயல்படவும். தொழில் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுந்த ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். வேலையாட்களிடம் சற்று நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : காலவிரயம் உண்டாகும்.
சுவாதி : நிதானத்துடன் செயல்படவும்.
விசாகம் : ஆலோசனை கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
மனதிற்கு பிடித்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தொழில் சார்ந்த புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பொதுச்சேவையில் ஈடுபட்டு நற்பெயர் உண்டாகும். தலைமைப் பதவிக்கான முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : நற்பெயர் உண்டாகும்.
கேட்டை : எண்ணங்கள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் பதவியில் இருப்பவரிடம் சற்று நிதானத்துடன் செயல்படவும். தொழில் துறையில் மரியாதைகள் மேம்படும். விவாதங்களின் மூலம் மாற்றமான சூழலும், அனுகூலமான பலனும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : நிதானத்துடன் செயல்படவும்.
உத்திராடம் : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
கல்வி தொடர்பான செயல்பாடுகளில் சிறு தடைகள் தோன்றி மறையும். பெரியவர்களின் ஆலோசனைகளால் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். போட்டித் தேர்வுகளில் பல தடைகளை தாண்டி எண்ணிய எண்ணங்களை செயல்படுத்துவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகளை நிதானமாக முடிவெடுத்து செயல்படுத்தவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : தடைகள் மறையும்.
திருவோணம் : முன்னேற்றமான நாள்.
அவிட்டம் : காரியசித்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
பணிபுரியும் இடங்களில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் பலவிதமான எண்ணங்களால் தயக்கமான சூழல் அமையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் மரியாதை அதிகரிக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : தரிசனம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். செய்யும் செயல்களை கவனமாக செயல்படுத்தவும். குணநலன்களில் மாறுபாடான சூழல் அமையும். புதுவிதமான லட்சியங்களை உருவாக்கி அது தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : பாராட்டப்படுவீர்கள்.
உத்திரட்டாதி : மாற்றமான நாள்.
ரேவதி : மனக்குழப்பங்கள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
