*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_புரட்டாசி 17_*

*04.10.2019*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

வாகனப் பயணங்களில் எச்சரிக்கை வேண்டும். சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். வணிகத்தில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். இளைய சகோதரர்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

அசுவினி : எச்சரிக்கை வேண்டும்.

பரணி : மந்தமான நாள்.

கிருத்திகை : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

நுட்பமான சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். கூட்டாளிகளால் இலாபம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் மற்றும் இலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் மற்றும் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.

ரோகிணி : இலாபம் உண்டாகும்.

மிருகசீரிடம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள். பணியில் உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மிருகசீரிடம் : வெற்றி கிடைக்கும்.

திருவாதிரை : செயல்வேகம் அதிகரிக்கும்.

புனர்பூசம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். வாரிசுகளின் மூலம் தொழில்வகை ஆதரவுகள் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். இளைய சகோதரர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

பூசம் : ஆசைகள் நிறைவேறும்.

ஆயில்யம் : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

கடிதத்தின் மூலம் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். நீர்நிலை சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு இலாபகரமான நாள். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகம் : மேன்மை உண்டாகும்.

பூரம் : முன்னேற்றமான நாள்.

உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத தனவரவால் பொருளாதாரம் மேம்படும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பல நாட்களாக இருந்துவந்த சிக்கல்களை அமைதியாக கையாண்டு முடிப்பீர்கள். சுயதொழில் செய்வதற்கான திட்டங்களை வகுப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

உத்திரம் : பொருளாதாரம் மேம்படும்.

அஸ்தம் : சாதகமான நாள்.

சித்திரை : புதிய திட்டங்கள் உருவாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

வாக்குவன்மையால் தொழில்வகை இலாபம் உண்டாகும். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : இலாபம் உண்டாகும்.

சுவாதி : மகிழ்ச்சியான நாள்.

விசாகம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

எண்ணங்களில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் முனைவோருக்கு கூடுதல் பணி உண்டாகும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை களைவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பங்குச்சந்தை துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய முதலீடுகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : தெளிவு பிறக்கும்.

அனுஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

கேட்டை : ஆதாயம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

புதிய வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். தலைமை அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கூட்டாளிகளால் அனுகூலமான சூழல் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : ஆதரவு கிடைக்கும்.

பூராடம் : பாராட்டப்படுவீர்கள்.

உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

கணவன், மனைவிக்கிடையே சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். மாற்றமான சூழலும், அதற்கான சிந்தனைகளும் தோன்றும். செய்யும் வேலைகளில் நிதானம் வேண்டும். வாகனப் பயணங்களில் விழிப்புணர்வு வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தேவையில்லாத சஞ்சலமான எண்ணங்களால் நெருங்கிய நபர்களை இழக்க நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : இன்னல்கள் மறையும்.

திருவோணம் : விழிப்புணர்வு வேண்டும்.

அவிட்டம் : இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

நிர்வாக துறையில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். பொதுச்சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். நுணுக்கமான தொழில் நுட்பங்களை பயில்வீர்கள். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்பட்டு பாராட்டப்படுவார்கள். தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.

சதயம் : எண்ணங்கள் மேலோங்கும்.

பூரட்டாதி : பாராட்டப்படுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

ஆன்மீக பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பலன்கள் உண்டாகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரியோர்களின் வழிகாட்டல்கள் சாதகமான பலன்களை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.

உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.

ரேவதி : ஆலோசனைகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•