*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆவணி 10_*

*27.08.2019*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். புத்திக்கூர்மையால் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

அசுவினி : பயணங்கள் சாதகமாகும்.

பரணி : பாராட்டப்படுவீர்கள்.

கிருத்திகை : புரிதல் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

வீண் செலவை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். தனவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். புதிய பதவி அல்லது பொறுப்புகள் உயரும். பிறருக்கு உதவுவதில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான செயல்களில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : சேமிப்பு அதிகரிக்கும்.

ரோகிணி : பொறுப்புகள் உயரும்.

மிருகசீரிடம் : இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சொத்து சார்ந்த செயல்களில் நிதானம் வேண்டும். அரசு தொடர்பான காரியங்களில் விரயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். தொழில் சம்பந்தமான போட்டிகள் அதிகரிக்கும். செய்யும் வேலைகளில் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.

திருவாதிரை : நிதானம் வேண்டும்.

புனர்பூசம் : இடமாற்றம் சாதகமாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

தொழில் சார்ந்த முதலீடுகளில் நிதானமாக செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உயர்கல்வி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.

பூசம் : எண்ணங்கள் மேம்படும்.

ஆயில்யம் : வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

பெரியோர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதுவிதமான மாற்றங்கள், வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகை ஏற்படலாம். பொதுக்கூட்டப் பேச்சுக்களால் ஆதரவு கிடைக்கும். மனதில் தெளிவான சிந்தனைகள் தோன்றுவதன் மூலம் சிறப்பான முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன் நிறம்

மகம் : மாற்றம் உண்டாகும்.

பூரம் : பிரச்சனைகள் குறையும்.

உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

உடன்பிறப்புகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். திட்டமிட்ட முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். தொழில், வியாபாரம் தொடர்பான செயல்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவால் தடைபட்ட செயல்கள் நிறைவடையும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

உத்திரம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

அஸ்தம் : சாதகமான நாள்.

சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் மனக்கசப்புகள் ஏற்படக்கூடும். உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களால் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணிபுரியும் இடத்தில் பொருட்களை கவனமாக கையாளவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : மனக்கசப்புகள் ஏற்படலாம்.

சுவாதி : ஆரோக்கியம் சீராகும்.

விசாகம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

எதிர்பார்த்த பயணங்கள் காலதாமதமாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எந்த செயலையும் செய்யும் முன்பு சிந்தித்து செயல்படவும். சொத்து பிரிவினைகளில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணி சம்பந்தமான வீண் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

அனுஷம் : கவனம் வேண்டும்.

கேட்டை : அலைச்சல்கள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பொதுநலம் சம்பந்தமான செயல்களில் தேவையான ஆதரவுகள் கிடைக்கும். செய்தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்று.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : ஆதரவு கிடைக்கும்.

பூராடம் : மேன்மை உண்டாகும்.

உத்திராடம் : வாதங்களை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

திட்டமிட்ட காரியங்கள் அனுகூலமான பலனை தரும். புதுவிதமான முயற்சிகளால் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடங்களில் திருப்தியான சூழல் அமையும். சிக்கலான சில விஷயங்களை சாதுர்யமாக பேசி முடித்துவிடுவீர்கள். மற்றவர்களிடம் கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திராடம் : அனுகூலமான நாள்.

திருவோணம் : மரியாதை உயரும்.

அவிட்டம் : வாதங்களை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

பிள்ளைகளின் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். திருமணம் சம்பந்தமான சுப முயற்சிகளில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளின் மூலம் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். சாமர்த்தியமான பேச்சுக்களால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.

சதயம் : முன்னேற்றம் காண்பீர்கள்.

பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

குழந்தைகளின் உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பயணங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் திறமையால் மதிப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.

உத்திரட்டாதி : பாராட்டப்படுவீர்கள்.

ரேவதி : இன்னல்கள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•