*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆவணி 04_*

*21.08.2019*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். வான்வழி பயணங்களால் தொழில் முறையில் உள்ளவர்கள் புகழப்படுவார்கள். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : கீர்த்தி உண்டாகும்.

பரணி : சாதகமான நாள்.

கிருத்திகை : அனுபவம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

அந்நியர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய முயற்சிகளில் சிறு காலதாமதம் ஏற்படும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். அதிகாரிகளிடம் பேசும்போது நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : சுபச் செய்திகள் கிடைக்கும்.

ரோகிணி : மாற்றமான நாள்.

மிருகசீரிடம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். சுபச் செய்திகள் வந்தடையும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிருகசீரிடம் : இன்பமான நாள்.

திருவாதிரை : சாதகமான நாள்.

புனர்பூசம் : கலகலப்பான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

தொழில் சார்ந்த அலைச்சல்கள் அதிகரிக்கும். பணியில் எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

பூசம் : இடமாற்றம் உண்டாகும்.

ஆயில்யம் : தனவரவுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். குடும்ப நபர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். உறவினர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : ஆதரவு கிடைக்கும்.

பூரம் : விருப்பங்கள் நிறைவேறும்.

உத்திரம் : மனக்கசப்புகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

பூர்வீக சொத்துக்களால் சுப விரயம் ஏற்படும். உடல் நலத்தில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்கள் வேலையில் கவனத்துடன் செயல்படவும். தம்பதிகளுக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் மற்றவர்களை எதிர்பார்க்காமல் பணிகளை தாங்களே செய்து முடிக்கவும். தொழில் சார்ந்த ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்வதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : சுப விரயம் ஏற்படும்.

அஸ்தம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

சித்திரை : கவனம் வேண்டும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். இழந்த பொருட்களை மீட்க முயற்சி செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து அன்பு அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகளிடம் அமைதி காக்கவும். வியாபாரம் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

சுவாதி : அன்பு அதிகரிக்கும்.

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

பணிபுரியும் இடங்களில் உங்களின் மீதான நம்பிக்கை உயரும். போட்டித் தேர்வுகளில் சுபச் செய்திகள் கிடைக்கும். சக ஊழியர்களால் வீண் பதற்றங்கள் நேரிடலாம். உறவினர்களால் அலைச்சல்கள் ஏற்படும். நிலுவையில் இருக்கும் பாக்கிகளை நயமாக பேசி வசூலிப்பீர்கள். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : நம்பிக்கை உயரும்.

அனுஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.

கேட்டை : தீர்வு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான சுப விரயங்களை செய்வீர்கள். நுட்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் மூலம் சுபச் செய்திகள் வந்து சேரும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். மனதில் இருந்து வந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : முயற்சிகள் கைகூடும்.

பூராடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

உத்திராடம் : பிரச்சனைகள் தீரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செய்யும் செயல்களில் பதற்றமின்றி செயல்படவும். சொத்துக்கள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும். தொழில் சார்ந்த பயணங்களில் சாதகமான செய்திகள் கிடைக்கும். அனுபவ அறிவு மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். சக ஊழியர்களால் மனவருத்தங்கள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

உத்திராடம் : கவனம் வேண்டும்.

திருவோணம் : எண்ணங்கள் மேம்படும்.

அவிட்டம் : அறிவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க செயல் திட்டம் வகுப்பீர்கள். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். முயற்சிக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.

சதயம் : திருப்தியான நாள்.

பூரட்டாதி : உயர்வு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்களின் பேச்சுக்கு ஆதரவு அதிகரிக்கும். அரசு தொடர்பான காரியங்களில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நினைத்த விதத்தில் முடிவடையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : மேன்மை உண்டாகும்.

உத்திரட்டாதி : நட்பு கிடைக்கும்.

ரேவதி : ஆதரவு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•