*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆடி 04_*

*20.07.2019*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். பணியில் சாதகமான சூழல் நிலவும். தாயின் உடல் நலத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

அசுவினி : அனுசரித்து செல்லவும்.

பரணி : சாதகமான சூழல் அமையும்.

கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். தொழிலில் ஏற்படும் அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். பல நாட்களாக இருந்து வந்த சிக்கல்களை அமைதியாக கையாண்டு முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : ஜெயம் உண்டாகும்.

ரோகிணி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மிருகசீரிடம் : மனக்கவலைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். தந்தை மற்றும் வாரிசுகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள். நிர்வாகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். புண்ணிய யாத்திரைகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிடம் : எண்ணங்கள் மேலோங்கும்.

திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

புனர்பூசம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். கடன் தொல்லைகள் குறையும். வாகனப் பயணங்களில் கவனத்துடன் செல்லவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : நிதானம் வேண்டும்.

பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

ஆயில்யம் : மாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

கணவன், மனைவிக்கிடையே உள்ள வாக்குவாதங்கள் குறைந்து அன்பு அதிகரிக்கும். கூட்டாளிகளால் சாதகமான சூழல் அமையும். பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : அன்பு அதிகரிக்கும்.

பூரம் : சாதகமான நாள்.

உத்திரம் : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். போட்டி, பந்தயங்களில் சாதகமான சூழல் அமையும். கையாளும் பொருட்களில் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : நிதானம் வேண்டும்.

அஸ்தம் : கவலைகள் நீங்கும்.

சித்திரை : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்பட்டு பாராட்டப்படுவீர்கள். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

சித்திரை : எண்ணங்கள் மேலோங்கும்

சுவாதி : மேன்மையான நாள்.

விசாகம் : தெளிவு பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும். பொது நலத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். நிர்வாகம் தொடர்பான முடிவுகளில் ஆதரவான சூழல் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். தந்தைவழி சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : உறவுநிலை மேம்படும்.

அனுஷம் : ஆதரவான நாள்.

கேட்டை : மரியாதைகள் உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.

பூராடம் : இன்னல்கள் நீங்கும்.

உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

நண்பர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். சர்வதேச வணிகம் எதிர்பார்த்த பலன்களை தரும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழல் அமையும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு பயணங்களால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : அபிவிருத்தி உண்டாகும்.

திருவோணம் : சாதகமான நாள்.

அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து செல்லவும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாகும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.

சதயம் : சாதகமான நாள்.

பூரட்டாதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

வாரிசுகள் மூலம் சுப விரயம் உண்டாகும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். உயர் கல்விக்கான முயற்சிகள் சாதகமான பலன்களை தரும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். வேள்விகளில் கலந்து கொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

பூரட்டாதி : சுப விரயம் உண்டாகும்.

உத்திரட்டாதி : சாதகமான பலன்கள் கிடைக்கும்.

ரேவதி : எண்ணங்கள் மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•