*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_வைகாசி 25_*

*08.06.2019*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*?மேஷம் ராசி*

எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். மனைகளில் கட்டிடம் கட்டுவதற்கான சூழல் அமையும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். மாணவர்கள் கல்வி பயிலும் விதத்தில் மாற்றம் உண்டாகும். விவாதங்களினால் புகழ் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அசுவினி : ஆதரவான நாள்.
பரணி : இலாபம் உண்டாகும்.
கிருத்திகை : புகழ் அடைவீர்கள்.

*?ரிஷபம் ராசி*

நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். மனதில் நினைத்த செயல் திட்டங்களை செயல்படுத்த முயல்வீர்கள். வெளியூர் தொடர்பான தொழில் முயற்சிகளால் இலாபம் அடைவீர்கள். பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள் . பொன், பொருள் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்
ரோகிணி : இலாபம் கிடைக்கும்
மிருகசீரிடம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

*?மிதுனம் ராசி*

புதிய மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.

*?கடகம் ராசி*

அமைதியான செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். வாக்குறுதிகளை சொன்ன விதத்தில் நிறைவேற்றுவீர்கள். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூசம் : செல்வாக்கு உயரும்.
ஆயில்யம் : பிரச்சனைகள் குறையும்

*?சிம்மம் ராசி*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் உயர்வு உண்டாகும். இறை வழிபாட்டில் மனம் லயிக்கும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். வர்த்தக பணிகளில் இலாபம் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நிர்வாக பொறுப்பில் இருப்பவர் கவனத்துடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : உயர்வான நாள்.
பூரம் : ஆசிகள் கிடைக்கும்.
உத்திரம் : கவனம் தேவை.

*?கன்னி ராசி*

வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் சாதகமான சூழல் அமையும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் உண்டாகும். சுயதொழிலில் சுபமான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : அனுகூலமான நாள்.
அஸ்தம் : தடங்கல்கள் உண்டாகும்.
சித்திரை : சுபச் செய்திகள் கிடைக்கும்.

*?துலாம் ராசி*

புதுவிதமான ஆராய்ச்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கூட்டாளிகளுடன் இணைந்து விருந்துகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். எண்ணங்களில் தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : மனம் மகிழ்வீர்கள்.
சுவாதி : ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
விசாகம் : தெளிவு பிறக்கும்.

*?விருச்சகம் ராசி*

தொழில் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் பொருளாதார நிலை மேம்படும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். மனதில் எதிர்காலம் சம்பந்தமான திட்டங்களை வகுப்பீர்கள். மனைவி வகையிலான உறவுகளின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : பொருளாதாரம் மேம்படும்.
அனுஷம் : நிதானத்துடன் செயல்படவும்.
கேட்டை : திட்டங்களை வகுப்பீர்கள்.

*?தனுசு ராசி*

தொழில் முன்னேற்றத்திற்கான புதிய முயற்சிகளில் நிதானம் வேண்டும். பணியில் உள்ள உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : முயற்சிகளில் நிதானம் தேவை.
பூராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திராடம் : சிந்தனைகள் தோன்றும்.

*?மகரம் ராசி*

தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவுகள் உண்டாகும். செய்தொழிலில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும். தொழிலில் வாடிக்கையாளர்களிடம் அமைதியுடன் நடந்துக்கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : மனச்சோர்வு உண்டாகும்.
திருவோணம் : தனவரவுகள் கிடைக்கும்.
அவிட்டம் : அமைதியுடன் நடந்துக்கொள்ளவும்.

*?கும்பம் ராசி*

பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொதுக்கூட்ட பேச்சுகளால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காது. செய்தொழிலில் புதியவர்களின் முதலீடுகள் உண்டாகும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். திருத்தல பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சதயம் : முதலீடுகள் உண்டாகும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.

*?மீனம் ராசி*

தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அமையும். திருமணப் பேச்சு வார்த்தைகள் சாதகமாக அமையும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தாயின் ஆதரவால் கவலைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : கவலைகள் நீங்கும்.
?????????
?????????