*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_வைகாசி 24_*

*07.06.2019*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தொழிலிற்கு பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். நிர்வாகம் தொடர்பாக இருந்து வந்த இன்னல்கள் குறையும். விவசாயம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

அசுவினி : பிரச்சனைகள் குறையும்.
பரணி : ஆதரவு கிடைக்கும்.
கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடன்பிறப்புகளால் ஆதாயமான பலன்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழல்கள் அமையும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சற்று காலதாமதமாக கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும்.
ரோகிணி : ஆதாயமான நாள்.
மிருகசீரிடம் : தனவரவுகள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு எதிர்பார்த்து கொண்டிருந்த இடமாற்றம் சாதகமாக அமையும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல்கள் உண்டாகும். குடும்ப பெரியவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் எதிர்பாராத ஒரு மாற்றத்தை உருவாக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மிருகசீரிடம் : சாதகமான நாள்.
திருவாதிரை : அலைச்சல்கள் ஏற்படும்.
புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். தொழில் சம்பந்தமான எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். மறைமுக திறமைகள் வெளிப்பட்டு அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பூசம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.
ஆயில்யம் : பாராட்டப்படுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

தாய்மாமன் உறவுகளிடம் சற்று அனுசரித்து செல்லவும். தம்பதிகளுக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : குழப்பமான நாள்.
உத்திரம் : புரிதல் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விரயங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் சற்று அனுசரித்து செல்லவும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் நெருக்கடிகள் குறையும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அமையும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். விவசாயம் சார்ந்த பணிகளால் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திரம் : சுப விரயங்கள் உண்டாகும்.
அஸ்தம் : நெருக்கடிகள் குறையும்.
சித்திரை : தேவைகள் பூர்த்தியாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தொழில் நிமிர்த்தமான பயணங்கள் சாதகமாக அமையும். புதிய மனை வாங்குவது பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப பெரியோர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான கடனுதவிகள் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : முயற்சிகள் கைக்கூடும்.
விசாகம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

உயர் அதிகாரிகளிடம் ஏற்பட்ட மனவருத்தங்கள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பயணம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். வெளிவட்டார தொடர்புகளால் உங்களின் மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : மனவருத்தங்கள் குறையும்.
அனுஷம் : அறிமுகம் உண்டாகும்.
கேட்டை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். புதிய நபர்களிடம் தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயனற்ற சிந்தனைகளால் மனக்குழப்பம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : நிதானம் வேண்டும்.
பூராடம் : பேச்சில் கவனம் தேவை.
உத்திராடம் : பொறுமையுடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

உறவினர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் நன்மை உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். கூட்டாளிகளின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இடமாற்றம் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திராடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
திருவோணம் : தனவரவுகள் கிடைக்கும்.
அவிட்டம் : வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்;-*

உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். ஆன்மீகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். நிலுவையில் இருந்து வந்த பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
சதயம் : எதிர்ப்புகள் மறையும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

புத்திரர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : விருப்பங்கள் நிறைவேறும்.
உத்திரட்டாதி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
ரேவதி : நற்பலன்கள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•