*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_வைகாசி 13_*
*27.05.2019*
*_திங்கட்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் தோன்றி மறையும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். ஞாபக மறதியால் செய்யும் பணிகளில் காலதாமதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : கவனம் வேண்டும்.
கிருத்திகை : காலதாமதம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கைக்கூடும். மனதில் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : அன்பு அதிகரிக்கும்.
ரோகிணி : உதவிகள் கைக்கூடும்.
மிருகசீரிடம் : வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
சாமர்த்தியமான செயல்பாடுகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். பயணங்களின் மூலம் மனமகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் ஏற்படும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். கெளரவ பதவிகளால் உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மிருகசீரிடம் : பாராட்டுகள் கிடைக்கும்.
திருவாதிரை : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
புனர்பூசம் : செல்வாக்கு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வது நன்மை அளிக்கும். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். புதிய ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் பழகவும். தூரத்து உறவினர்களிடமிருந்து கிடைக்கும் சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : அனுசரித்துச் செல்வது நல்லது.
பூசம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
மனதிற்கு விருப்பமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். தாயாரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் இருந்த எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். வியாபாரத்தில் நீங்கள் செய்யும் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திரம் : சுபிட்சம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். வழக்கில் எதிர்பாராத தீர்ப்பு கிடைக்கும். வாகன வசதிகள் மேம்படும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்
உத்திரம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அஸ்தம் : அனுகூலம் உண்டாகும்.
சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
பிள்ளைகளால் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உடல்சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மனநிம்மதி ஏற்படும். இழுபறியான வேலைகள் விரைவில் முடியும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சித்திரை : ஆதரவான நாள்.
சுவாதி : புதிய நட்பு கிடைக்கும்.
விசாகம் : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்;-*
மனதிற்கு பிடித்த விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் உங்களின் மதிப்பு உயரும். பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
விசாகம் : முயற்சிகள் ஈடேறும்.
அனுஷம் : மதிப்பு உயரும்.
கேட்டை : இடமாற்றம் சாதகமாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் விரும்பி வருவார்கள். திட்டமிட்டு செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்த முயல்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
பூராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
உத்திராடம் : இலாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
தன்னம்பிக்கையுடன் மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். திட்டமிட்ட பணிகளை சிறிது அலைந்து முடிக்க வேண்டிய சூழல் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மற்றவர்களை பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் எண்ணிய இலாபம் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சபைகளில் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்துகளில் இடர்பாடுகள் தோன்றி மறையும். வெளிநாட்டு முயற்சிகளில் எண்ணிய பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாட்டால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : இலாபம் உண்டாகும்.
சதயம் : ஆதரவு பெருகும்.
பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
பணி நிமிர்த்தமான பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது கவனம் வேண்டும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வேண்டுதல்களை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதுவிதமான நுட்பங்களை பற்றி கற்றுக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும்.
ரேவதி : இலாபம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
