*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_வைகாசி 11_*

*25.05.2019*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் நீங்கள் செய்யும் புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வெளியூர் பயணங்களின்போது கோப்புகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அசுவினி : காலதாமதமாகும்.
பரணி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கிருத்திகை : கோப்புகளில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சுப காரியம் தொடர்பான முயற்சிகளில் நினைத்த வெற்றி கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : வெற்றி கிடைக்கும்.
மிருகசீரிடம் : பிரச்சனைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

மனதில் தோன்றும் பலவித எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகம் தொடர்பான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப பலன் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிடம் : அமைதி வேண்டும்.
திருவாதிரை : அலைச்சல்கள் ஏற்படும்.
புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் ஆதரவாக செயல்படுவார்கள். பணிபுரியும் இடத்தில் பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : பொறுமை வேண்டும்.
ஆயில்யம் : ஆதரவான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடல் சோர்வால் பணிகளில் காலதாமதம் ஏற்படும். வியாபாரம் சம்பந்தமாக எதிர்பாராத பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம். உறவினர்களின் உதவியால் சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பெற்றோரிடமிருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருப்பு நிறம்

மகம் : ஆசைகள் நிறைவேறும்.
பூரம் : தீர்வு கிடைக்கும்.
உத்திரம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

தொழில் அபிவிருத்திக்கான வங்கி கடன் கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்களின் உதவியால் சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திரம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
அஸ்தம் : வெற்றி கிடைக்கும்.
சித்திரை : எண்ணங்கள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த பணிச்சுமை குறையும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : இன்னல்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

உடன்பிறப்புகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விசாகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
அனுஷம் : இலாபகரமான நாள்.
கேட்டை : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

தொழிலில் கூட்டாளிகளுடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மற்றவர்களின் செயல்பாடுகளால் திட்டமிட்ட காரியம் ஈடேற காலதாமதமாகும். நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : நிதானம் வேண்டும்.
பூராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
உத்திராடம் : சிந்தித்துச் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். விவசாயம் சார்ந்த செயல்களில் முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். பொருட்சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவோணம் : முன்னேற்றம் உண்டாகும்.
அவிட்டம் : இன்னல்கள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளியூர் பயணம் தொடர்பான முயற்சிகள் வெற்றியை தரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
சதயம் : உயர்வான நாள்.
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியான சூழலும் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் பொருளாதாரம் மேம்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : கலகலப்பான நாள்.
உத்திரட்டாதி : பொருளாதாரம் மேம்படும்.
ரேவதி : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•