*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_சித்திரை 07_*
*_20.04.2019_*
*_சனிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நெருங்கிய நண்பர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். மனதில் இருந்த நீண்ட நாள் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். விவசாயம் தொடர்பான புதுவிதமான ஆலோசனைகளும், ஆதரவுகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அசுவினி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பரணி : முயற்சிகள் ஈடேறும்.
கிருத்திகை : புத்துணர்ச்சி
.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
பிறருக்கு உதவும்போது கவனம் வேண்டும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். நீண்ட நாள் நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள். வெளியூர் வேலைவாய்ப்புகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வர்த்தகம் சம்பந்தமான பயணங்களால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : இன்னல்கள் குறையும்.
ரோகிணி : சாதகமான நாள்.
மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொருள் சேர்ப்பதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். பெரியோர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : புகழ் உண்டாகும்.
புனர்பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
கடன்களை அடைப்பதற்கான தனவரவுகள் மேம்படும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வாகனப் பயணங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : தனவரவுகள் மேம்படும்.
பூசம் : இலாபம் உண்டாகும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
சக ஊழியர்களிடம் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். தொழில் நிமிர்த்தமான எண்ணங்கள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகள் மேம்படும். பொருளாதாரத்தில் மேன்மையான நிலை உண்டாகும். சம வயதினருடன் தேவையில்லாத விவாதங்களை தவிர்த்தல் நன்மை பயக்கும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
மகம் : மேன்மையான நாள்.
பூரம் : முயற்சிகள் மேம்படும்.
உத்திரம் : வாதங்களில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
தொழிலில் புதிய முறைகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எண்ணிய செயலில் காரியசித்தி உண்டாகும். சொந்த ஊர் பயணங்களால் ஆதரவு கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். பேச்சுத்திறமையால் பாராட்டப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திரம் : கலகலப்பான நாள்.
அஸ்தம் : காரியசித்தி உண்டாகும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வை காண முயற்சிப்பீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு உழைப்பிற்கேற்ற முன்னுரிமை கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்கள் விரைவில் முடியும். வெளியூர் தொடர்பான பணிகள் சாதகமாக முடியும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
சுவாதி : சுபமான நாள்.
விசாகம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
தொழில் சம்பந்தமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். அனுபவ ரீதியான தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வீர்கள். உறவினர்களின் எதிர்பாராத வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : ஜெயம் உண்டாகும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
அந்நியர்களின் உதவிகளால் பொருட்சேர்க்கை உண்டாகும். மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கூட்டாளிகளால் சாதகமான சூழல் அமையும். பணியில் உள்ளவர்களுக்கு வருவாய் உயர்வு உண்டாகலாம். சுபச் செயல்கள் கைக்கூடி வரும். நண்பர்களின் மூலம் தொழில் வாய்ப்புகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மூலம் : ஆசைகள் நிறைவேறும்.
பூராடம் : பொருளாதாரம் மேம்படும்.
உத்திராடம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
எதிர்பார்த்த கடனுதவிகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். அலைச்சலும், சோர்வும் உண்டாகும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். பொன், பொருள் சேர்க்கையில் நிதானம் வேண்டும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வாகனப் பயணங்களில் மிதவேகம் நன்று.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
திருவோணம் : சோர்வு உண்டாகும்.
அவிட்டம் : பயணங்களில் மிதவேகம் நன்று
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். தந்தையின் ஆதரவால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பணியில் உள்ள தலைமை அதிகாரிகளின் ஆதரவால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். எண்ணங்கள் மேம்படும். சுயதொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அவிட்டம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : இன்னல்கள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும் மற்றும் பதற்றமான சூழல் அமையும். விலையுயர்ந்த பொருட்களை கையாளுவதில் எச்சரிக்கை வேண்டும். மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களால் குழப்பம் உண்டாகும். முடிவுகளில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : மனக்குழப்பம் உண்டாகும்.
உத்திரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ரேவதி : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
