*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_சித்திரை 05_*
*_18.04.2019_*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
எதிர்பாலின மக்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். பொழுதுப்போக்கு விஷயங்களால் கவனச் சிதறல் உண்டாகும். உறவினர்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அசுவினி : இன்னல்கள் குறையும்.
பரணி : அனுசரித்துச் செல்லவும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
எதிர்பாராத தனவரவால் சேமிப்பு உயரும். உறவினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பெரியோர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். தொழில் சம்பந்தமாக திட்டமிட்ட பணிகள் இனிதே நடைபெறும். பிள்ளைகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் செல்வாக்கு உயரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : சேமிப்பு உயரும்.
ரோகிணி : செல்வாக்கு அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : சுபமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். வேளாண்மையில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். எடுத்த காரியத்தில் தைரியத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடியான சூழல் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : இலாபம் உண்டாகும்.
திருவாதிரை : வெற்றி காண்பீர்கள்.
புனர்பூசம் : இன்பமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள். புதிய தேடல் உண்டாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்க செயல்திட்டம் தீட்டுவீர்கள். புதிய முயற்சிகளில் சில மறைமுக தடைகள் வந்து போகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
புனர்பூசம் : எதிர்ப்புகள் விலகும்.
பூசம் : தேடல் பிறக்கும்.
ஆயில்யம் :வாய்ப்புகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பிறரின் பணிகளை ஏற்கும்போது நிதானம் வேண்டும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய நபர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். உறவினர்கள் வழியில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மகம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பூரம் : நிதானம் வேண்டும்.
உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
இழுபறியில் இருந்த திருமண முயற்சிகள் கைக்கூடும். வெளியூர் தொழில் வாய்ப்புகளில் சுபச் செய்திகள் கிடைக்கும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். குருமார்களின் ஆசிகள் கிடைக்கும். கெளரவ பதவிகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
உத்திரம் : முயற்சிகள் கைக்கூடும்.
அஸ்தம் : ஆசிகள் கிடைக்கும்.
சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
உடனிருப்பவர்களை பற்றி நன்கு புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தொழில் சார்ந்த புதிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த தனவரவுகளில் இழுபறி உண்டாகும். வாகனப் பயணங்களால் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : புரிதல் உண்டாகும்.
சுவாதி : அன்பு அதிகரிக்கும்.
விசாகம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
வேலையாட்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சபைகளில் எதிர்பார்த்த ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : அனுகூலமான நாள்.
அனுஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.
கேட்டை : சேமிப்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். தொழில் சம்பந்தமான முடிவுகளில் கவனம் வேண்டும். பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் உண்டாகும். செய்யும் பணிகளில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். வாகனத்தில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : அனுசரித்துச் செல்லவும்.
பூராடம் : கவனம் வேண்டும்.
உத்திராடம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
கூட்டாளிகளால் பொருள் இலாபம் உண்டாகும். வியாபாரத்தில் இழந்த பொருட்களை மீட்பதற்கான கடனுதவிகள் கிடைக்கும். நிர்வாகத் திறமை வெளிப்பட்டு பாராட்டப்படுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : இலாபம் உண்டாகும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : திருப்திகரமான நாள்
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும். எண்ணிய செயலை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகலாம். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். பணியில் பிறரின் அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடலாம். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
அவிட்டம் : காலதாமதம் ஏற்படும்.
சதயம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூரட்டாதி : விவேகத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். உறவினர்களால் சாதகமான சூழல் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளால் சாதகமான சூழல் அமையும். மனதில் புதுவிதமான புத்துணர்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளிடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : தனவரவு கிடைக்கும்.
உத்திரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.
ரேவதி : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
