*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_சித்திரை 02_*

*_15.04.2019_*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

சமூக சேவையில் ஈடுபடுபவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவும். உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அசுவினி : செயல்பாடுகளில் கவனம் தேவை.
பரணி : முயற்சிகள் சாதகமாகும்.
கிருத்திகை : செயல்வேகம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

பழைய நினைவுகளால் மனதில் சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். கடன்களை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களால் சுபச் செலவுகள் உண்டாகும். வாகனத்திற்கான பராமரிப்பு செலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : கவலைகள் குறையும்.
ரோகிணி : முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
மிருகசீரிடம் : பராமரிப்பு செலவுகள் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

திட்டமிட்ட காரியங்களை முழு ஈடுபாட்டுடன் செயல்படுத்துவீர்கள். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிடம் : காரியசித்தி உண்டாகும்.
திருவாதிரை : அனுசரித்துச் செல்லவும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

தாமதப்பட்ட செயல்கள் கைக்கூடி வரும். தொழில் நிமிர்த்தமான பயணங்களால் இலாபகரமான சூழல் அமையும். வெளியூர் பணிகளால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் சாதகமான சூழல் அமையும். புதிய தொழில் நிமிர்த்தமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : தடைகள் அகலும்.
பூசம் : சாதகமான சூழல் அமையும்.
ஆயில்யம் : புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் காலதாமதமாக கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பொருளாதார சிக்கல்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அமையும். நினைவாற்றல் மேம்படும். புதிய எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : மாற்றம் உண்டாகும்.
பூரம் : சிக்கல்கள் குறையும்.
உத்திரம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

மனையின் மூலம் இலாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பூர்வீகம் தொடர்பான சுபச் செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : இலாபம் உண்டாகும்.
அஸ்தம் : விருப்பங்கள் நிறைவேறும்.
சித்திரை : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

உடன்பிறப்புகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்களை அமைத்து செயல்படுத்துவீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

சித்திரை : கனிவு வேண்டும்.
சுவாதி : முன்னேற்றம் உண்டாகும்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

புதிய முயற்சிகளால் சாதகமான சூழல் அமையும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். உடனிருப்பவர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
கேட்டை : ஆதாயம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : இலாபம் உண்டாகும்.
பூராடம் : சுபிட்சமான நாள்.
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மந்தத்தன்மையால் செய்யும் வேலைகளில் காலதாமதம் உண்டாகும். தொழில் நிமிர்த்தமான பயணங்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் வாதங்களை தவிர்க்கவும். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : காலதாமதம் உண்டாகும்.
திருவோணம் : பயணங்களில் கவனம் தேவை.
அவிட்டம் : வாதங்களை தவிர்க்கவும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

நண்பர்களின் மூலம் சாதகமான உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் அமையும். சுப நிகழ்ச்சிகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் :புதிய இலட்சியம் பிறக்கும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

தொழிலில் கூட்டாளிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். வெளியூர் பயணங்களால் இலாபம் உண்டாகும். தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். கௌரவ பதவிகளின் மூலம் மதிப்பு உயரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை :தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.
ரேவதி : மதிப்பு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•