*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_இனிய தமிழ் புத்தாாண்டு நல் வாழ்த்துக்கள் _*
*_சித்திரை 01_*
*_14.04.2019_*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவது பற்றிய எண்ணங்கள் தோன்றும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் பொருளாதார சிக்கல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அசுவினி : வெற்றி கிடைக்கும்.
பரணி : மன தைரியம் மேம்படும்.
கிருத்திகை : சிக்கல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
தொழில் நிமிர்த்தமாக நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கும். உயர் கல்வி பயில்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நிர்வாகம் தொடர்பான புதிய முடிவுகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும். தாய் பற்றிய கவலைகள் மனதில் தோன்றி மறையும். புத்திரர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குலதெய்வ வழிபாடு சுபிட்சத்தை தரும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
கிருத்திகை :முன்னேற்றமான நாள்.
ரோகிணி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிருகசீரிடம் : தெளிவு பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
பெரியோர்களின் ஆசீர்வாதத்தால் சுபிட்சமான சூழல் உண்டாகும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். வெளியூரிலிருந்து எதிர்பாராத செய்திகள் கிடைக்கும். புதிய முயற்சிகளால் செல்வாக்கு உயரும். மனதில் இருந்து வந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
மிருகசீரிடம் : சுபிட்சமான நாள்.
திருவாதிரை : கலகலப்பான சூழல் அமையும்.
புனர்பூசம் : தீர்வு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
எந்தவொரு செயலையும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி சம்பந்தமான செலவுகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழில் அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
புனர்பூசம் : உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
பூசம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
ஆயில்யம் : அறிமுகம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் அமையும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் வழிகாட்டுதல் மூலம் முன்னேற்றமான சூழல் அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் நீக்கி சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சிறு சிறு தடைகள் தோன்றி மறையும். கூட்டாளிகளின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த வேலைப்பளு குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : பாராட்டுகள் கிடைக்கும்.
அஸ்தம் : தடைகள் தோன்றி மறையும்.
சித்திரை : வேலைப்பளு குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உடன்பணிபுரிபவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் கவனத்துடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளால் குழப்பமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.
சுவாதி : வழக்குகளில் கவனம் வேண்டும்.
விசாகம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
தேவையற்ற மனக்குழப்பங்களால் செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் உரையாடும்போது சற்று நிதானத்துடன் உரையாடவும். புதிய முதலீடுகளில் பெரியவர்களின் ஆலோசனையை கேட்பது நன்மையை அளிக்கும். சமூக சேவையில் ஈடுபடுபவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்பு குறையும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : காலதாமதம் உண்டாகும்.
அனுஷம் : பேச்சில் கவனம் தேவை.
கேட்டை : பெரியவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன்பணிபுரிபவர்களுடன் தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும். விமர்சனங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும். பயணங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : தேவைகள் நிறைவேறும்.
பூராடம் : இன்பமான நாள்.
உத்திராடம் : வாதங்களை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
செய்யும் வேலையில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கி வெற்றி உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழிலில் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் குறையும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : தடைகள் அகலும்.
திருவோணம் : பொறுப்புகள் குறையும்.
அவிட்டம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் நிதானத்துடன் செல்லவும். மனதில் தோன்றும் எண்ணங்களால் குழப்பமான சூழல் நிலவும். எந்தவொரு வேலையையும் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படுத்தவும். போட்டிகளில் ஈடுபடும்போது சற்று எச்சரிக்கையுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : நிதானம் வேண்டும்.
பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பாராத தனவரவுகள் சாதகமான பலன்களை அளிக்கும். மனைவி வழி உறவுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் உடன்பணிபுரிபவர்களால் சாதகமான சூழல் உண்டாகும். சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
ரேவதி : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
