காணாமல் போன செல்போனை கண்டுபிடித்துக் கொடுத்த போலீசாருக்கு பாராட்டு

சேலம் மாநகரம் அம்மாபேட்டை காவல் சரகத்தை சேர்ந்த அருணா ராஜ் என்பவரது செல்போனை காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில்  அம்மாபேட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு. சதீஷ் குமார்,  சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு. சந்திரசேகர் மற்றும் தலைமை காவலர் திரு.தாமரைச் செல்வன் ஆகியோர்கள் அடங்கிய குழுவினர் ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர். சிறப்பாக செயல்பட்ட அம்மாபேட்டை காவல் நிலைய போலீசாரை  மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் பாராட்டினார்.