காவல் துறையோடு கொஞ்சி மகிழ்ந்த மனநலம் குன்றிய குழந்தைகள்
சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு 27/03/19 ஆம் தேதி காலை பொது இடங்களை கற்பித்தல் நிகழ்ச்சிக்காக அஸ்தம்பட்டி ஞான பாலர் இல்லத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியை திருமதி.உஷா கலாவதி அவர்கள் மனம் நலம் குன்றிய 40 குழந்தைகளை அழைத்து வந்தார். அவர்களை வரவேற்ற காவல் ஆய்வாளர் திரு. செந்தில் அவர்கள் குழந்தைகளுக்கு ஆரத்தி எடுத்து பொட்டு வைத்து இனிப்பு வழங்கி அவர்களுக்கு காவல்துறையை செயல்பாடுகள் குறித்து விளக்கம் கூறினார். மேலும் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி.சித்ரா அவர்கள் இக்குழந்தைகளுக்கு நோட்டு மற்றும் எழுது பொருள் கொடுத்து மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகள் காவல் துறைக்கு மகிழ்ச்சியோடு நன்றி கூறினர்.

