பிக்பாக்கெட் திருடர்களைப் பிடித்து கொடுத்த பொதுமக்களுக்கு சேலம் மாநகர காவல் ஆணையர் வாழ்த்து 
சேலம் மாநகரம் பள்ளப்பட்டி காவல் சரகம் புதிய பேருந்து நிலையத்தில் மணிகண்டன் என்பவர் 26/03/19 ஆம் தேதி சுமார் 11.00 மணிக்கு பேருந்திலிருந்து கீழே இறங்கும் போது அடையாளம் தெரியாத 3 நபர்கள் அவரது பர்சை பிடிங்கி செல்லும்போது அவர் சத்தம் போட்டு அருகில் இருந்த பொதுமக்கள் உதவியோடு மூன்று நபர்களை பிடித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேற்கண்ட சம்பவம் குறித்து மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் திரு. அயூப் கான் அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் அவர்கள் பெயர் 1.சுப்பிரமணி(36), 2.ஆனந்த்(31) 3.அப்துல்லா(26) என தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ. 2500 பணத்தை மீட்டு குற்றவழக்கில் கண்ட எதிரிகளை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளை பிடித்துக் கொடுத்த பொதுமக்களை சேலம் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் வாழ்த்தி பாராட்டினார்கள்.
