*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_பங்குனி 14_*
*_28.03.2019_*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
உடல்சோர்வு நீங்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுவிதமான யுக்திகளைப் புகுத்தி இலாபத்தைப் பெருக்குவீர்கள். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். நிலுவையில் இருந்த தனவரவுகள் வசூலாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அசுவினி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பரணி : உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை : இலாபத்தைப் பெருக்குவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களிடம் அமைதியை கையாளவும். சிலருக்கு பணி மாற்றம் உண்டாகும். பெரியோர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகு செயல்படுத்துங்கள். கூட்டாளிகளிடமும், நண்பர்களிடம் அமைதியாக நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : பயணங்களில் கவனம் வேண்டும்.
ரோகிணி : மாற்றம் உண்டாகும்.
மிருகசீரிடம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகளால் சில விரயச் செலவுகள் நேரிடலாம். மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களால் செயல்களில் காலதாமதம் நேரிடலாம். உயர் அதிகாரிகளின் ஆதரவு ஒருவிதமான உத்வேகத்தை அளிக்கும். வெளியூர் பயணங்களால் மனதில் உற்சாகம் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிடம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
திருவாதிரை : செலவுகள் ஏற்படலாம்.
புனர்பூசம் : உற்சாகம் பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
தலைமைப் பதவியில் இருப்போர்க்கு அனுகூலமான நாள். திருமணப் பேச்சு வார்த்தைகள் கைக்கூடி வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். மறைமுக தடைகளை தகர்த்து வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
புனர்பூசம் : கவலைகள் நீங்கும்.
பூசம் : கலகலப்பான நாள்.
ஆயில்யம் : கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தனவரவு மேம்படும். சிறு தூர பயணங்களால் மாற்றம் ஏற்படும். கூட்டாளிகளால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விளையாட்டில் சாதனை புரிவதற்கான சூழல் அமையும். அனுகூலமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : மாற்றம் ஏற்படும்.
பூரம் : அனுகூலமான நாள்.
உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
சாதுர்யமான பேச்சுகளால் பாராட்டப்படுவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். முக்கிய முடிவுகளில் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். செய்யும் பணிகளில் பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்படுவது மேன்மையை தரும். மனதில் இருந்த ஒருவிதமான தயக்கம் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : பாராட்டப்படுவீர்கள்.
அஸ்தம் : இன்னல்கள் நீங்கும்.
சித்திரை : மேன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். நினைவாற்றல் மேம்படும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். தைரியத்துடன் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : முன்னேற்றமான நாள்.
சுவாதி : இலாபம் அதிகரிக்கும்.
விசாகம் : சுமூகமான முடிவுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. திருப்திகரமான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : வெற்றி கிடைக்கும்.
அனுஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.
கேட்டை : திருப்திகரமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். புதிய நபர்களிடம் பழகும்போது கவனம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்களில் காலதாமதம் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும். செய்யும் வேலையில் கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : காலதாமதம் உண்டாகும்.
பூராடம் : வாதங்களை தவிர்க்கவும்.
உத்திராடம் : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
மனதில் புதுவிதமான யோசனைகள் தோன்றும். பொருட்சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடித்து பாராட்டப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.
திருவோணம் : வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள்.
அவிட்டம் : மதிப்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். நிர்வாகத்திறமை வெளிப்படும். சுப காரியங்கள் கைக்கூடும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : வெற்றி உண்டாகும்.
சதயம் : இலாபம் கிடைக்கும்.
பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். ஆன்மீக எண்ணங்கள் மனதிற்கு நிம்மதியைத் தரும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். நண்பர்களுக்கிடையே இருந்து வந்த பிணக்குகள் நீங்கி நட்பு மலரும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும்.
ரேவதி : நட்பு மலரும்.
•┈┈•❀??????❀•┈┈•
