வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகன திருடர்களை பிடித்த போலீசாருக்கு பாராட்டு

சேலம் மாநகரம் பள்ளப்பட்டி காவல் சரகத்தில் ஐந்து ரோடு அருகே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள் என ஜெயக்குமார் என்பவர் கொடுத்த புகாரின்பேரில்  காவல் உதவி ஆய்வாளர். திரு. அயூப் கான் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். 26/03/ 19ஆம் தேதி தெப்பக்குளம் அருகே உதவி ஆய்வாளர் திரு. அயூப்கான் மற்றும் தலைமை காவலர் திரு. ரமேஷ் என்பவருடன் சேர்ந்து வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த சந்தேகத்துக்குரிய நபரைப் பிடித்து விசாரித்தபோது அவர்கள் பெயர் பாட்ஷா மற்றும் வினோத் என தெரிவித்தனர். மேற்கண்ட இருசக்கர வாகனத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர். இருசக்கர வாகனத்தை திருடிய பாட்ஷா(28) மற்றும் வினோத்(29) ஆகியோர்களிடம் இருந்து இரு சக்கர வாகனத்தை மீட்டு குற்றவழக்கில் எதிரிகளை  சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.  வாகன தணிக்கையில்  துரிதமாக செயல்பட்டு திருடர்களை பிடித்த பள்ளப்பட்டி போலீசாரை காவல் ஆணையாளர் அவர்கள் பாராட்டினார்.