செல்போன் திருடனைப் பிடித்துக் கொடுத்த பொது மக்களுக்கு சேலம் மாநகர ஆணையர் பாராட்டு
சேலம் மாநகரம் புதிய பேருந்து நிலையம் அருகே 22. 3. 19ஆம் தேதி அதிகாலை செல்போன் கடையின் உரிமையாளர் தூங்கிக்கொண்டிருக்கும்போது கடையின் உள்நுழைந்து ரூ10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை எடுத்துக்கொண்டு ஓடிய நபரை உரிமையாளர் சத்தம் போடவே அருகில் உள்ள பொதுமக்கள் திருடனை கையும் களவுமாக பிடித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஜீவா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் திரு அயூப் கான் அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார். அதில் செல்போனை திருடியவன் விருத்தாசலத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பது தெரிய வந்தது. வழக்கில் கண்ட குற்றவாளியிடமிருந்து சுமார் ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மீட்டு செல்போன் திருடனை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேற்படி குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை பிடிக்க உதவிய பொதுமக்களை மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.
