*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_பங்குனி 06_*
*_20.03.2019_*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் உதவிகளால் தொழிலில் உண்டான பிரச்சனைகள் நீங்கும். திருமணப்பேச்சு வார்த்தைகள் சாதகமாக அமையும். பொருளாதார மேன்மை உண்டாகும். அரசு சம்பந்தமான செயல்களை விரைவில் முடிக்க முயல்வீர்கள். தனவரவில் இருந்து வந்த தடைகள் அகலும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அசுவினி : சுபமான நாள்.
பரணி : பிரச்சனைகள் நீங்கும்.
கிருத்திகை : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
தாயின் ஆதரவால் கவலைகள் நீங்கும். எண்ணங்களின் போக்கில் மாற்றம் உண்டாகும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : கவலைகள் நீங்கும்.
ரோகிணி : மாற்றம் உண்டாகும்.
மிருகசீரிடம் : புதிய நட்பு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
பொதுக்கூட்ட பேச்சுகளால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்க காலதாமதமாகும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். தொழிலில் வாடிக்கையாளர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : நிதானத்துடன் செயல்படவும்.
திருவாதிரை : அலைச்சல்கள் உண்டாகும்.
புனர்பூசம் : செயல்பாடுகளில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். அந்நியர்களின் நட்பு கிடைக்கும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் சுபிட்சம் உண்டாகும். பொருள் சேர்ப்பதற்கான கலையறிவு அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : ஆசிர்வாதம் கிடைக்கும்.
பூசம் : சுபிட்சம் உண்டாகும்.
ஆயில்யம் : கலையறிவு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
தொழிலில் வாடிக்கையாளர்களின் ஆதரவால் சாதகமான சூழல் உண்டாகும். சுயதொழிலில் மேன்மையான நிலை அமையும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் உதவிகளால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் எண்ணிய எண்ணங்களை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
உத்திரம் : செயல்பாடுகள் மேலோங்கும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
மாணவர்கள் கல்வி பயிலும் விதத்தில் மாற்றம் உண்டாகும். புதிய நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உண்டாகும். நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். தொழில் துறையில் உண்டான போட்டிகளை சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : புதிய நுட்பங்களை கற்பீர்கள்.
அஸ்தம் : மனச்சோர்வு உண்டாகும்.
சித்திரை : ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
இளைய சகோதரர்களினால் ஆதாயம் உண்டாகும். தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : ஆதாயம் கிடைக்கும்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
நீர் நிலையம் சம்பந்தப்பட்ட தொழில்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
விசாகம் : அன்பு அதிகரிக்கும்.
அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
கேட்டை : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணிகளில் உழைப்பிற்கேற்ற முன்னுரிமை கிடைக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மூலம் : திறமைகள் வெளிப்படும்.
பூராடம் : தேவைகள் நிறைவேறும்.
உத்திராடம் : முன்னுரிமை கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
பிறரை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் மற்றும் பதற்றமான சூழல் அமையும். வெளியூர் தொழில் முயற்சிகளில் சுமாரான பலன்கள் கிடைக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : விவேகம் வேண்டும்.
திருவோணம் : பதற்றமான நாள்.
அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள். சுபச் செய்திகள் வந்தடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும். தொழிலில் மேன்மையான சூழல் அமையும். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்ட பணிகளை இனிதே முடித்து வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : கவலைகள் நீங்கும்.
பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
இளைய சகோதரர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். வருங்காலம் சம்பந்தப்பட்ட பணிகளில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.
ரேவதி : காரியசித்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
