கொலை வழக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000 அபராதம்
19.03.2019 சேலம் மாநகரம் அம்மாபேட்டை காவல் சரகம் சித்தேஸ்வரா நகர கூட்டுறவு வங்கி அருகில் குடியிருக்கும் கௌரி என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது கணவரை வீட்டு வாடகை பிரச்சனையால் வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டார் என கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு.M. அங்கப்பன் அவர்கள் வழக்கை பதிவு செய்தார். அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் திரு. நாகராஜ் அவர்கள் துரிதமாக புலன் விசாரணை நடத்தியதில் குற்றவாளி கிருஷ்ணமூர்த்தி வயது 52 s/o சீனிவாசன் நகர கூட்டுறவு வங்கி அருகில், அம்மாபேட்டை மெயின் ரோடு, சேலம் என்பவருக்கு 19/03/2019 ஆம் தேதி சேலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி அவர்கள் நீதிமன்றம் எண் 2 ல் குற்றவழக்கில் கண்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். மேற்கண்ட வழக்கை சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட அம்மாபேட்டை காவல் நிலைய போலீசாரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்கள்.
