பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள்வது குறித்த பயிற்சி முகாம்
19/03/ 2019 ஆம் தேதி சேலம் மாநகர காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூட்டத்தில் சேலம் மாநகரம், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 100 காவல் ஆளிநர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பிரிவு காவல் கண்காணிப்பாளர் திருமதி. சோனல் சந்திரா IPS அவர்கள் பங்கேற்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகளை கையாள்வது எப்படி என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மாநகர காவல் ஆணையாளர் திரு.K.சங்கர் IPS அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் காவல்துறையினர் கவனமுடனும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் அடையாளங்களை நீதிமன்றம் தவிர பொது இடங்களில் தெரிவிக்க கூடாது. அறிவியல் பூர்வமான வழக்கினை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
