*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_மாசி 30_*

*_14.03.2019_*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனத்துடன் இருக்கவும். செயல்பாடுகளில் வேகமும், செய்யும் வேலைகளில் புத்திக்கூர்மையும் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர் அதிகாரிகளின் ஆதரவு சாதகமான பலனை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அசுவினி : புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
பரணி : உடைமைகளில் கவனம் தேவை.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

சமூக சேவையில் ஈடுபடுவதற்கான சாதகமான சூழல் உண்டாகும். வெளிநாடு சம்பந்தமான பயணங்களால் மேன்மை உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களால் ஆதரவான சூழல் அமையும். தொழில் பயணங்களால் அலைச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்படலாம். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்துச் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : மேன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் : ஆதரவான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

மன தைரியம் அதிகரிக்கும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் மனச்சோர்வு உண்டாகும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நன்மையை அளிக்கும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். சில செயல்களை செய்து முடிக்க அலைச்சல் அதிகமாகும். வாகனப் பயணங்களில் கவனத்துடன் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிடம் : தைரியம் பிறக்கும்.
திருவாதிரை : நிதானத்துடன் செயல்படவும்.
புனர்பூசம் : அலைச்சல் அதிகமாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

திருமணம் தொடர்பான முயற்சிகள் கைக்கூடி வரும். சர்வதேச வணிகத்திலிருந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். வழக்குகளில் புதியவர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். போட்டித்தேர்வில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : முயற்சிகள் கைக்கூடும்.
பூசம் : சுபிட்சம் உண்டாகும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

பணி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். செய்தொழிலில் நீங்கள் செய்யும் சிறு மாற்றங்களின் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். சுபச் செய்திகள் கைக்கூடி வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் நிதானம் வேண்டும். அரசு தொடர்பான காரியங்களில் தடை, தாமதங்கள் நீங்கி எண்ணியவை ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : பயணங்கள் சாதகமாகும்.
பூரம் : இலாபம் உண்டாகும்.
உத்திரம் : எண்ணியவை ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

தொழில் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும். நெருக்கமானவர்களிடம் நிதானத்தை கையாள வேண்டும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வாக்குறுதிகளை தரும்போது சிந்தித்துச் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : சிந்தனைகள் மேலோங்கும்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : சிந்தித்துச் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

எதிர்ப்பை தாண்டி திட்டமிட்ட காரியங்களில் வெற்றி காண்பீர்கள். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேம்படும். புதிய வேலைகளில் முன்னேற்றமான சூழல் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் மூலம் ஆதரவு அதிகரிக்கும். திறமைக்கேற்ற அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கும். புதியவர்களின் அறிமுகம் புதுவிதமான அனுபவத்தை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

சித்திரை : வெற்றி காண்பீர்கள்.
சுவாதி : ஆதரவான நாள்.
விசாகம் : பாராட்டு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். தொழில் நிமிர்த்தமான புதிய முயற்சிகளில் கவனத்துடன் இருக்கவும். உடன்பிறந்தவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் நிதானத்துடன் செல்லவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
அனுஷம் : வாதங்களை தவிர்க்கவும்.
கேட்டை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

நண்பர்களுடன் செல்லும் உல்லாசப் பயணங்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சுரங்கம் சம்பந்தமான பணியில் ஈடுபடும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வேள்வியில் கலந்து கொள்வதற்கான சூழலும், வாய்ப்பும் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : இலாபம் உண்டாகும்.
பூராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திராடம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த தனவரவுகள் சாதகமான பலனை அளிக்கும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

உத்திராடம் : ஆசைகள் நிறைவேறும்.
திருவோணம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகள் மேம்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். புதிய ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த சாதகமான சூழல் உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். சொந்த ஊர் பயணம் மனதிற்கு புதுவிதமான மாற்றத்தை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : முயற்சிகள் மேம்படும்.
சதயம் : நிதானத்துடன் செயல்படவும்.
பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் செயல்களால் வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். ஆன்மீகப் பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தந்தை வழி சொத்துகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். இணையதளம் தொடர்பான தொழிலில் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரட்டாதி : செல்வாக்கு உயரும்.
ரேவதி : தீர்வு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•