*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_மாசி 18_*
*_02.03.2019_*
*_சனிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புத்திரர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழல் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
அசுவினி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பரணி :அனுகூலமான நாள்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
சாதுர்யமான பேச்சுகளால் அனைவரையும் கவர்வீர்கள். பொருளாதார மேன்மைக்கான முயற்சிகள் அனுகூலமான பலனை தரும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : மேன்மையான நாள்.
ரோகிணி : ஆதாயம் உண்டாகும்.
மிருகசீரிடம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
பணிபுரியும் இடங்களில் நிதானத்துடன் செயல்படவும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் படிக்கவும். பிறருடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : நிதானத்துடன் செயல்படவும்.
திருவாதிரை : கல்வியில் கவனம் வேண்டும்.
புனர்பூசம் : குறை சொல்வதை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
வாக்குவன்மையால் இலாபம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். இணையதளம் சம்பந்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணியில் உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : இலாபம் அதிகரிக்கும்.
பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : அனுகூலம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
எதிர் பாலின மக்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். பணியில் இருப்பவர் மற்றவர்களின் பணியை கூடுதலாக பார்க்க நேரிடும். தாய்மாமன் வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். எடுத்த செயலை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : அனுகூலம் உண்டாகும்.
பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : காலதாமதம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஒப்பந்தம் சம்பந்தமான முடிவுகளில் பெரியோர்களிடம் ஆலோசித்து எடுப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புனித யாத்திரைக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் சம்பந்தமான புதிய நுணுக்கங்களை கற்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : இன்பமான நாள்.
அஸ்தம் : முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை : புதிய நுணுக்கங்களை கற்பீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
குடும்ப பெரியோர்களின் ஒத்துழைப்பால் நன்மை உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். மனை சம்பந்தமான பேச்சுகளில் இலாபம் உண்டாகும். குடும்பத்தில் சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். செய்யும் தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : நன்மை உண்டாகும்.
சுவாதி : இலாபம் உண்டாகும்.
விசாகம் : திருப்தியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
செய்தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்களிடம் நிதானம் வேண்டும். இறை வழிபாடு மேற்கொள்வதால் எண்ணங்கள் சீராகும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
அனுஷம் : நிதானம் வேண்டும்.
கேட்டை : எண்ணங்கள் சீராகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
பிரிந்தவர்கள் ஒன்றிணைவதற்கான சூழல் உண்டாகும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களால் காலதாமதமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : அனுகூலமான நாள்.
பூராடம் : காரியசித்தி உண்டாகும்.
உத்திராடம் : எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்ப பெரியோர்களிடம் அமைதி காக்கவும். மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் உண்டாகும். அஞ்ஞான எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.
அவிட்டம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
எண்ணிய செயலை எண்ணிய மாத்திரத்தில் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த தனவரவு திருப்திகரமாக இருக்கும். பொருளாதார முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். மனவருத்தங்கள் மறைந்து புத்துணர்ச்சி உண்டாகும். வீண் வாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : தனவரவு உண்டாகும்.
சதயம் : இன்னல்கள் நீங்கும்.
பூரட்டாதி : புத்துணர்ச்சி மலரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
குடும்பத்தில் சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய சொத்துகள் மற்றும் வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பும் அதற்கான பாராட்டுகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : இன்பமான நாள்.
உத்திரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
ரேவதி : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
