பாஜகவின் பி டீம் என தங்களை யாரும் சொல்லக்கூடாது என்று மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில், கமல்ஹாசனை கவுரவிக்கும் விதமாக, தாள வாத்தியம் இசைக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனு அளிக்கலாம் என்றார். கோடி கோடியாக சம்பாதித்தாலும், கடைசியில் அந்த சொத்து உடன் வராது சொத்து கூட வராது என்றும், மருத்துவமனையில் இருக்கும்போது, அந்த சொத்து வந்ததா? என கேள்வி எழுப்பினார்.