*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_மாசி 09_*
*_21.02.2019_*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
தைரியம் மற்றும் நிதானத்துடன் செயல்படுவதால் மனதில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான நாள். புதிய உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் வேலைகளில் கவனமாக இருக்கவும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அசுவினி : நிதானத்துடன் செயல்படவும்.
பரணி : காரியசித்தி உண்டாகும்.
கிருத்திகை : பணிகளில் கவனம்
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
புதிய சிந்தனைகள் மேலோங்கும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் வேண்டும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். கடல் மார்க்க பயணங்களால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : உறவுகளால் ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிடம் : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
கடிதத்தின் மூலம் சாதகமான செய்திகள் கிடைக்கும். கால்நடைகளிடம் கவனமாக இருத்தல் வேண்டும். வாகன பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மன வருத்தங்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.
மிருகசீரிடம் : சுபிட்சம் உண்டாகும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். அந்நியர்களால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். மனைவியிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் அதிகரிக்கும். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : இலாபம் உண்டாகும்.
பூசம் : அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம் : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
இழந்த பொருட்களை மீட்பதற்கான தனஉதவிகள் கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வேளாண்மையில் ஏற்பட்ட தேக்க நிலை நீங்கும். இறை பணிக்காக நன்கொடைகள் கொடுத்து மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மகம் : தன உதவிகள் கிடைக்கும்.
பூரம் : புதிய நட்பு கிடைக்கும்.
உத்திரம் : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
கூட்டாளிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சாதுர்யமான பேச்சுகளால் பாராட்டப்படுவீர்கள். பணியில் உள்ள சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். தூர தேச பயணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : கீர்த்தி உண்டாகும்.
அஸ்தம் : ஆசிகள் கிடைக்கும்.
சித்திரை : சிக்கல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
சேமிப்புகள் உயரும். வாகனப் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். பதவி உயர்வால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். மனக்கவலைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
சுவாதி : மகிழ்ச்சியான நாள்.
விசாகம் : மேன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். இறைவழிபாட்டால் மகிழ்ச்சி கிடைக்கும். வாதம் புரிதலில் எச்சரிக்கையுடன் இருக்கவும். மனைகளால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
விசாகம் : தனலாபம் உண்டாகும்.
அனுஷம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
கேட்டை : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான தகவல்கள் வந்தடையும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். பணிகளில் மந்தத்தன்மையால் சாதகமற்ற சூழல் உண்டாகும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கை வேண்டும். எண்ணிய கடனுதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : அனுகூலமான நாள்.
பூராடம் : எச்சரிக்கை வேண்டும்.
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
உயர் பதவி பெறுவதற்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் கீர்த்தி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திராடம் : கீர்த்தி உண்டாகும்.
திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.
சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் வேலைவாய்ப்புகள் எண்ணிய பலனை தரும். பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களில் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.
ரேவதி : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
