*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_மாசி 07_*

*_19.02.2019_*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

பொதுக்கூட்ட பேச்சுகளால் ஆதரவு கிடைக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பயணங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : இன்னல்கள் நீங்கும்.
கிருத்திகை : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

தொழில் திறமையால் உங்களின் மதிப்பு உயரும். மனை சம்பந்தமான விவகாரங்களில் இருந்த தாமதங்கள் அகலும். பொருட்சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : மதிப்பு உயரும்.
ரோகிணி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
மிருகசீரிடம் : ஆரோக்கியம் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். தந்தைவழி சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். உயர் அதிகாரிகளிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும். சுரங்க பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிடம் : புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
திருவாதிரை : ஆசிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : சிக்கல்கள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் அமையும். வாகனவசதி மேம்படும். உத்தியோகஸ்தரர்கள் பணி தொடர்பான பயணங்களை மேற்கொள்வார்கள். சமூகசேவை செய்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். திருமண வரன்கள் கைகூடும். திறமைகளால் பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

புனர்பூசம் : சாதகமான நாள்.
பூசம் : பயணங்கள் உண்டாகும்.
ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

புதிய தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். உறவுகளிடம் அமைதி போக்கினை கையாளவும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : புரிதல் உண்டாகும்.
பூரம் : விவேகம் வேண்டும்.
உத்திரம் : நெருக்கடியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

குடும்ப உறுப்பினர்களை பற்றிய கவலையால் மனசோர்வு உண்டாகும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்று. கால்நடைகளிடம் கவனத்துடன் செயல்படவும். வழக்கு விவகாரங்களில் இருந்து வந்த இழுபறியான நிலை நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திரம் : மனசோர்வு உண்டாகும்.
அஸ்தம் : வாதங்களை தவிர்க்கவும்.
சித்திரை : இழுபறி நீங்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

இசைக் கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். மக்கள் தொடர்புதுறையில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். நண்பர்களின் ஆதரவால் தடைபட்ட செயல்கள் நிறைவடையும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.
சுவாதி : மேன்மை உண்டாகும்.
விசாகம் : இலட்சியம் பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

பொதுநலச்செயலில் ஈடுபடுபவர்கள் அமைதிப் போக்கினை கையாளவும். புதிய முடிவுகளை எடுக்கும்போது பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

விசாகம் : அமைதி காக்கவும்.
அனுஷம் : ஆலோசனைகளை கேட்கவும்.
கேட்டை : நிதானத்துடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் ஆதரவால் சுபிட்சம் உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பேச்சுத் திறமையால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : இலாபம் உண்டாகும்.
பூராடம் : சுபிட்சம் உண்டாகும்.
உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். உடல் சோர்வால் எடுத்த பணி நிறைவடைய காலதாமதமாகும். சுபச் செய்திகளால் சுப விரயங்கள் உண்டாகும். பெற்றோர்களை பற்றிய கவலைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.
திருவோணம் : காலதாமதம் உண்டாகும்.
அவிட்டம் : கவலைகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

இயந்திரம் சம்பந்தமான பணியில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதமும், அலைச்சலும் உண்டாகலாம். உத்தியோகஸ்தரர்கள் பிறரின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : நிதானம் வேண்டும்.
சதயம் : அனுகூலம் உண்டாகும்.
பூரட்டாதி : அலைச்சல் உண்டாகலாம்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பிறக்கும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். சிந்தையின் போக்கில் மாற்றம் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

பூரட்டாதி : புத்துணர்ச்சி பிறக்கும்.
உத்திரட்டாதி : இலாபம் கிடைக்கும்.
ரேவதி : மாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•