*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_தை 20_*

*_03.02.2019_*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

நட்பு வட்டம் பெருகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். கௌரவ பதவிகளால் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகளால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : நட்பு வட்டம் பெருகும்.
பரணி : திறமைகள் வெளிப்படும்.
கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

குடும்ப உறுப்பினர்களால் மேன்மையான நிலை ஏற்படும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும். எதிர்பார்த்த திருமண வரன்கள் கைக்கூடும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : மேன்மையான நிலை உண்டாகும்.
ரோகிணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மிருகசீரிடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

பணியில் பதற்றத்தை தவிர்க்கவும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். எதிர்பாலின மக்களிடம் அமைதி காக்கவும். செய்யும் செயலில் பிறரின் வசைச் சொற்களை கேட்டு கவலைப்பட வேண்டாம். இளைய சகோதரர்களால் விரயச் செலவுகள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : நிதானம் வேண்டும்.
திருவாதிரை : பணியில் கவனம் தேவை.
புனர்பூசம் : விரயச் செலவுகள் நேரிடலாம்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

மனைவியின் உறவினர்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். தந்தையுடன் கலந்து உரையாடும்போது நிதானம் வேண்டும். வெளியூர் சம்பந்தமான தொழில் முடிவுகளை எடுப்பீர்கள். வர்த்தக முதலீடுகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : சாதகமான சூழல் உண்டாகும்.
பூசம் : நிதானம் வேண்டும்.
ஆயில்யம் : இலாபகரமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

மாணவர்கள் பொழுதுபோக்கு விஷயங்களை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தவும். புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் காரியத்தடை நேரிடலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பழைய கடன்களால் மன வருத்தங்கள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பூரம் : கவனம் தேவை.
உத்திரம் : காரியத்தடை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமாக பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். வாகனப் பயணங்களின்போது ஆவணங்களை எடுத்துச் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.
அஸ்தம் : கலகலப்பான நாள்.
சித்திரை : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

உத்தியோகத்தில் திருப்தியான நிலை அமையும். நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எண்ணங்களில் தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

சித்திரை : திருப்தியான நாள்.
சுவாதி : மதிப்பு அதிகரிக்கும்.
விசாகம் : தெளிவு பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

எடுத்த பணியை விடாப்பிடியாக இருந்து செய்து முடிப்பீர்கள். மனை விவகாரங்களில் எதிர்பாராத இலாபம் உண்டாகும். பிறரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும். வேலை தேடுவோருக்கு சுபமான நாள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

விசாகம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
அனுஷம் : உதவிகள் கிடைக்க காலதாமதமாகும்.
கேட்டை : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். குடும்பத்தினருடன் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். கணவன்-மனைவி இடையே உறவுநிலை மேம்படும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : அறிமுகம் உண்டாகும்.
பூராடம் : எண்ணம் அறிந்து செயல்படுவீர்கள்.
உத்திராடம் : தனவரவுகள் கிடைக்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

புதிய ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவும். மனதில் குழப்பம் உண்டாகும். தலைமை அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு தேவை.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : நிதானத்துடன் செயல்படவும்.
அவிட்டம் : விழிப்புணர்வு தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

வாதத்திறமையால் இலாபம் உண்டாகும். வெளியூர் சம்பந்தமான பயணங்களில் இருந்த தடைகள் நீங்கும். பிறருக்கு உதவும்போது கவனம் வேண்டும். கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் நேரிடலாம். நுணுக்கமான நுட்பங்களை பயில்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : இலாபகரமான நாள்.
சதயம் : தடைகள் நீங்கும்.
பூரட்டாதி : புதிய நுட்பங்களை பயில்வீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். பணியில் எதிர்பாராத இழுபறியான நிலை உண்டாகும். தனவரவால் சேமிப்பு அதிகரிக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரட்டாதி : சுபிட்சம் உண்டாகும்.
ரேவதி : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•