*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_தை 11_*

*_25.01.2019_*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

குலதெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்கள். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களில் இருந்த தடைகள் அகலும். சாதுர்யமான பேச்சுகளால் அனைவரையும் கவர்வீர்கள். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : பேச்சுகளால் இலாபம் உண்டாகும்.
கிருத்திகை : ஆசிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முக்கிய முடிவுகளை எடுக்கவும். தடைப்பட்ட காரியங்களை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். பணி சம்பந்தமான முயற்சிகளில் எண்ணிய இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : ஆலோசனைகளை கேட்கவும்.
ரோகிணி : வாய்ப்புகள் உண்டாகும்.
மிருகசீரிடம் : சாதகமான முடிவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் இனிதே நிறைவேறும். பொருளாதார மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். புதிய இலக்கை நிர்ணயித்து செயல்படுத்துவீர்கள். கொடுக்கல் – வாங்கலில் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : எண்ணங்கள் நிறைவேறும்.
திருவாதிரை : பொருளாதாரம் மேம்படும்.
புனர்பூசம் : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

நண்பர்களின் உதவியால் ஆதாயமான சூழல் உண்டாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வாதத்திறமையால் மாற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் உயரும். மனக்கவலைகள் நீங்கி அமைதி ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.
பூசம் : மாற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : அமைதி ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். சுபச் செய்திகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். வாகனங்களால் செலவுகள் உண்டாகும். அலைச்சல்கள் மற்றும் பயணச் செலவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.
உத்திரம் : செலவுகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

தந்தைவழி சொத்துக்களை மாற்றியமைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். வாகனங்களை வாங்குவதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். புதிய உத்வேகத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திரம் : சொத்துச்சேர்க்கை உண்டாகும்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். வீண் ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகளால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : இன்னல்கள் குறையும்.
சுவாதி : மனக்கசப்புகள் நீங்கும்.
விசாகம் : அனுகூலமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

தொழிலில் இருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். புதிய முயற்சிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும். முக்கிய ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். சக ஊழியர்களிடம் நிதானப்போக்கை கையாளவும். தொழில் சம்பந்தமான விஷயங்களை எவரிடமும் பகிர வேண்டாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

விசாகம் : எதிர்ப்புகள் குறையும்.
அனுஷம் : இலாபம் கிடைக்கும்.
கேட்டை : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

உயர் அதிகாரிகளால் அனுகூலமான செயல்கள் நடைபெறும். பொது நலத்திற்கான எண்ணங்கள் மேலோங்கும். தொலை தொடர்பு துறை சம்பந்தமான துறையில் எதிர்பார்த்த பதவி உயர்வு ஏற்படும். வியாபாரத்தில் ஏதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மூலம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூராடம் : உயர்வு ஏற்படும்.
உத்திராடம் : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். தாய்வழி உறவுகளால் மேன்மை உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் நற்பெயர்கள் கிடைக்கும் .

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
திருவோணம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.
அவிட்டம் : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

உறவினர்களிடம் அமைதியுடன் செயல்படவும். மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சிற்சில பிரச்சனைகள் ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சர்வதேச வணிகம் சம்பந்தமான முதலீடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம் : அமைதியுடன் செயல்படவும்.
சதயம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
பூரட்டாதி : முதலீடுகளில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். அறச்செயல்கள் புரிவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். புதிய நபர்களிடம் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மை உண்டாகும். பூமி விருத்திக்கான பணிகளில் இருந்து வந்த தடை தாமதங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

பூரட்டாதி : ஞானம் மேம்படும்.
உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும்.
ரேவதி : தடைகள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•