*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_மார்கழி 16_*

*_31.12.2018_*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : முன்னேற்றம் உண்டாகும்.
பரணி : மகிழ்ச்சி பிறக்கும்.
கிருத்திகை : நம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : தெளிவு பிறக்கும்.
ரோகிணி : எண்ணங்கள் ஈடேறும்.
மிருகசீரிடம் : மனக்கசப்புகள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாகன வசதி பெருகும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வாக்குறுதிகளில் கவனம் வேண்டும். புதுவித ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருவாதிரை : இன்னல்கள் குறையும்.
புனர்பூசம் : புதிய நட்பு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். ஆடைச்சேர்க்கை உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். போட்டிகளால் இலாபம் அடைவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தைகள் கைக்கூடும். மனைகளால் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : ஒற்றுமை மேலோங்கும்.
பூசம் : ஆசிர்வாதம் கிடைக்கும்.
ஆயில்யம் : செல்வாக்கு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். முயற்சிக்கேற்ற முன்னேற்றமான சூழல் உண்டாகும். பொழுதுப்போக்கு செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.
பூரம் : உறவு மேம்படும்.
உத்திரம் :ஆர்வம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். வெளியூர் தொடர்பான தொழில் வாய்ப்புகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். இறை வழிபாட்டை மேற்கொள்வீர்கள். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

உத்திரம் : ஆதரவான நாள்.
அஸ்தம் : மேன்மை உண்டாகும்.
சித்திரை :வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தொழிலில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு அதிகாரிகளிடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : கீர்த்தி உண்டாகும்.
சுவாதி : ஆசைகள் நிறைவேறும்.
விசாகம் : உயர்வு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

நிர்வாகத்தில் உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். வெளிநாட்டு பயணங்களால் நன்மை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : மனவருத்தங்கள் நீங்கும்.
அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
கேட்டை : காரியசித்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள். புதிய தொழில் முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். பொருள் சேர்ப்பதற்கான சாதகமான நிலை அமையும். வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : மனக்கவலைகள் குறையும்.
பூராடம் : சுப விரயம் உண்டாகும்
உத்திராடம் : வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : தனித்திறமைகள் வெளிப்படும்.
திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் : தேடல் உருவாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பதில் கவனத்துடன் இருக்கவும். சக ஊழியர்களை நிதானத்துடன் அனுசரித்துச் செல்லவும். புதிய நபர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். செய்யும் வேலைகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : முயற்சிகள் மேலோங்கும்.
சதயம் : முடிவுகளில் நிதானம் வேண்டும்.
பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். சந்திராஷ்டம தினம் என்பதால் பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். பணியில் பொறுப்புகள் உயரும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

பூரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.
உத்திரட்டாதி : உதவுவதில் கவனம் தேவை.
ரேவதி : பொறுப்புகள் உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•