*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_மார்கழி 01_*

*_16.12.2018_*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

புதிய நுட்பங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் நினைத்த செயல்திட்டங்களை செயல்படுத்த முயல்வீர்கள். வெளியூர் தொழில் முயற்சிகளால் இலாபம் அடைவீர்கள். பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். பொன், பொருட்சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அசுவினி : ஆர்வம் அதிகரிக்கும்.
பரணி : முயற்சிகளால் இலாபம் உண்டாகும்.
கிருத்திகை : தீர்வு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

புதுவிதமான ஆராய்ச்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். கூட்டாளிகளுடன் இணைந்து விருந்துகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். எண்ணங்களில் தெளிவு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : மனம் மகிழ்வீர்கள்.
ரோகிணி : ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
மிருகசீரிடம் : தெளிவு பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு மேம்படும். சுபச் செயல்கள் தொடர்பான முயற்சிகள் எண்ணிய பலனை அளிக்கும். சொந்த ஊர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : மனச்சோர்வு உண்டாகும்.
திருவாதிரை : செல்வாக்கு மேம்படும்.
புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தந்தையின் ஆதரவால் கவலைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : கவலைகள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

தொழில் முன்னேற்றத்திற்கான புதிய முயற்சிகளில் நிதானம் வேண்டும். உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : முயற்சிகளில் நிதானம் வேண்டும்.
பூரம் : அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திரம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

தொழில் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்ப பொருளாதார நிலை மேம்படும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். எதிர்காலம் சம்பந்தமான திட்டங்களை வகுப்பீர்கள். மனைவி வகையிலான உறவுகளின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : பொருளாதாரம் மேம்படும்.
அஸ்தம் : நிதானத்துடன் செயல்படவும்.
சித்திரை : புதிய திட்டங்களை வகுப்பீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

புதிய மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் பெருமை உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் அமையும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
சுவாதி : மகிழ்ச்சியான நாள்.
விசாகம் : முன்னேற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் உயர்வான சூழ்நிலை உண்டாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் இலாபம் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : உயர்வான நாள்.
அனுஷம் : ஆசீர்வாதம் கிடைக்கும்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

அமைதியான செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். சொன்ன வாக்குறுதிகளை சொன்ன விதத்தில் நிறைவேற்றுவீர்கள். விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். காதில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : மகிழ்ச்சியான சூழல் அமையும்.
பூராடம் : செல்வாக்கு உயரும்.
உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். மனைகளில் கட்டிடம் கட்டுவதற்கு ஆதரவான வாய்ப்புகள் அமையும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். மாணவர்கள் பயிலும் விதத்தில் மாற்றம் உண்டாகும். விவாதங்களினால் புகழ் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : ஆதரவான நாள்.
திருவோணம் : இலாபம் கிடைக்கும்.
அவிட்டம் : புகழ் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

பணியில் பொறுப்புகள் உயரும். செய்தொழிலில் புதியவர்களின் முதலீடுகள் உண்டாகும். சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். திருத்தலப் பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : பொறுப்புகள் உயரும்.
சதயம் : புதிய முதலீடுகளை செய்வீர்கள்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் சாதகமான சூழல் அமையும். எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சுயதொழிலில் இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை நிறம்

பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : தடங்கல்கள் உண்டாகும்.
ரேவதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•