*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_கார்த்திகை 26_*
*_12.12.2018_*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த காரியத்தை பல தடைகளை கடந்து சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். அரசு சம்பந்தமான காரியங்கள் சாதகமாக முடியும். பணிகளில் முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அசுவினி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பரணி : இன்னல்கள் நீங்கும்.
கிருத்திகை : பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
தந்தை வழி உறவுகளின் மூலம் ஆதாயமான சூழல் உண்டாகும். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். வர்த்தகம் தொடர்பான செயல்களில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் மறையும். வெளியூர் பயணங்களால் எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிடம் : தனலாபம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சந்திராஷ்டம தினம் என்பதால் நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. சிலருக்கு தெய்வீகப் பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய காரியங்களில் ஈடுபடும்போது தகுந்த ஆலோசனை வேண்டும். உடன்பிறப்புகளிடம் அனுசரித்துச் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மிருகசீரிடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
புத்திரர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவதற்கான வாய்ப்புகள் அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
புனர்பூசம் : ஆசைகள் நிறைவேறும்.
பூசம் : சுபிட்சமான நாள்.
ஆயில்யம் : சிந்தனைகள் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
தாயின் உடல்நலனில் கவனம் வேண்டும். நிர்வாகம் சம்பந்தமான பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்சனைகள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பூரம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
உத்திரம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
மற்றவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும். செய்யும் செயல்களில் பொறுமை அவசியம். எதிர்பார்த்த காரியம் முடிவதில் காலதாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனையும், இலாபமும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.
அஸ்தம் : பொறுமை வேண்டும்.
சித்திரை : இலாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தைரியமாக முடிவெடுப்பீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும், இலாபமும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
சித்திரை : உற்சாகமான நாள்.
சுவாதி : கலகலப்பான நாள்.
விசாகம் : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உங்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணிகளில் கவனமாக இருக்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : வெற்றி உண்டாகும்.
அனுஷம் : மதிப்பு உயரும்.
கேட்டை : சிந்தித்து செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
எதிர்பாராத சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் தைரியம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துகளின் மூலம் எதிர்பாராத தனவரவு உண்டாகும். அலுவலகத்தில் திருப்தியான சூழ்நிலை அமையும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு
மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூராடம் : தனவரவு மேம்படும்.
உத்திராடம் : அன்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும், இலாபமும் கூடுதலாகக் கிடைக்கும். சக வியாபாரிகளின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : மாற்றமான நாள்.
திருவோணம் : மாற்றமான நாள்.
அவிட்டம் : தெளிவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
மறைமுக திறமைகள் வெளிப்படும். மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் விலகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.
சதயம் : குழப்பங்கள் நீங்கும்.
பூரட்டாதி : ஆதாயம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் ஈடேறும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகளின் ஆலோசனைகள் சாதகமாக இருக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
ரேவதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
