*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_புரடாசி 12_*
*_28.09.2018_*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தலைமை பதவியில் இருப்பவர்களுக்கு அனுகூலமான நாள். திருமணப் பேச்சு வார்த்தைகள் கைகூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். புதிய நபர்கள் அறிமுகமாவார்கள். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அசுவினி : கவலைகள் நீங்கும்.
பரணி : கலகலப்பான நாள்.
கிருத்திகை : கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
தொழில் சம்பந்தமாக ஏற்பட்ட நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். பிறருக்கு உதவும்போது கவனம் வேண்டும். எதிர்பாராத சுப செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
ரோகிணி : சாதகமான சூழல் அமையும்.
மிருகசீரிடம் : போட்டிகளை சமாளிப்பீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
குடும்ப நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனதில் இருந்த வந்த குழப்பங்கள் நீங்கும். பூமி விருத்திக்கான செயல்திட்டங்களில் சாதகமான சூழல் ஏற்படும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். சகோதரர்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்.
மிருகசீரிடம் : ஆசைகள் நிறைவேறும்.
திருவாதிரை : குழப்பங்கள் நீங்கும்.
புனர்பூசம் : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
பணிபுரியும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தாயாரின் உடல்நலத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். முக்கிய முடிவுகளில் பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். குடும்ப பொருளாதாரம் மேம்படும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
புனர்பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
பூசம் : பொருளாதாரம் மேம்படும்.
ஆயில்யம் : புதிய நுணுக்கங்களை கற்பீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சாதுர்யமான பேச்சுகளால் பாராட்டப்படுவீர்கள். தைரியத்துடன் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். எண்ணிய செயலை சில தடைகளுக்கு செய்து முடிப்பீர்கள். பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : பாராட்டப்படுவீர்கள்.
பூரம் : நிதானம் வேண்டும்.
உத்திரம் : தைரியத்துடன் செயல்படுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். புதிய நபர்களிடம் பழகும்போது கவனம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்களில் காலதாமதம் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும். சந்திராஷ்டம தினம் என்பதால் செய்யும் வேலையில் கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : செயல்களில் காலதாமதம் உண்டாகும்.
அஸ்தம் : விவாதங்களை தவிர்க்கவும்.
சித்திரை : பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமாக புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் சில விரயச் செலவுகள் நேரிடலாம். தொழிலில் சில மாற்றங்களை செய்வீர்கள். மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களால் செயல்களில் காலதாமதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
சித்திரை : கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
சுவாதி : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
விசாகம் : புதிய மாற்றங்களை செய்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
சக பணியாளர்களிடம் உங்களின் மதிப்பு உயரும். குடும்ப உறுப்பினர்களினால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டாளிகளால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : உங்களின் மதிப்பு உயரும்.
அனுஷம் : அனுகூலமான நாள்.
கேட்டை : ஒற்றுமை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்த முயல்வீர்கள். பணிபுரியும் இடங்களில் உயர் அதிகாரிகளிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் சாதகமாக இருக்கும். பங்காளிகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். நினைவாற்றல் மேம்படும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : முன்னேற்றமான நாள்.
திருவோணம் : இலாபம் அதிகரிக்கும்.
அவிட்டம் : ஆசிர்வாதம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானப்போக்கை கையாளவும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் ஏற்பட்ட தடைகள் அகலும். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தனவரவு மேம்படும். சிறு தூர பயணங்களால் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : நிதானம் வேண்டும்.
சதயம் : தடைகள் அகலும்.
பூரட்டாதி : மாற்றம் ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். பிறருடைய பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் உண்டாகலாம். சிலருக்கு சாதகமான பணிமாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தால் விரயச் செலவுகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
பூரட்டாதி : பயணங்களில் கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
ரேவதி : செலவுகள் ஏற்படலாம்.
•┈┈•❀??????❀•┈┈•
