*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_புரடாசி 11_*

*_27.09.2018_*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். அரசு தொடர்பான செயல்களில் ஆதாயம் உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்கள் சாதகமான முடிவுகளை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : எண்ணங்கள் மேம்படும்.
பரணி : முயற்சிகள் சாதகமான பலனைத் தரும்.
கிருத்திகை : மகிழ்ச்சி கூடும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். மனை சம்பந்தமான பேச்சுகளில் அமைதி வேண்டும். சேமிப்பில் சில தடைகள் வந்து போகும். எடுத்தச் செயலை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : பணிச்சுமை அதிகரிக்கும்.
ரோகிணி : அமைதி வேண்டும்.
மிருகசீரிடம் : காலதாமதம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களால் காலதாமதமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நன்மை கிடைக்கும். செய்யும் தொழிலில் திருப்தியான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.
திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
புனர்பூசம் : திருப்தியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஒப்பந்தம் சம்பந்தமான முடிவுகளை பெரியோர்களிடம் ஆலோசித்து எடுப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். புனித யாத்திரைக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : இன்பமான நாள்.
பூசம் : பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும்.
ஆயில்யம் : பயணங்களால் மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

பிரிந்தவர்கள் ஒன்றிணைவதற்கான சூழல் உண்டாகும். எதிர்பாலின மக்களால் அனுகூலமான சூழல் அமையும். தடைபட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாய்மாமன் உறவுகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : காரிய சித்தி உண்டாகும்.
உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்ப பெரியோர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். மனதில் ஒருவிதமான பதற்றம் தோன்றும். அஞ்ஞான எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திரம் : அமைதியை கடைபிடிக்கவும்.
அஸ்தம் : அஞ்ஞான எண்ணங்கள் அதிகரிக்கும்.
சித்திரை : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

குடும்பத்தில் சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய சொத்துகள் மற்றும் வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், அதற்கான பாராட்டுகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

சித்திரை : இன்பமான நாள்.
சுவாதி : எண்ணங்கள் ஈடேறும்.
விசாகம் : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

பணிபுரியும் இடங்களில் நிதானத்துடன் செயல்படவும். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் நிதானம் தேவை. பிறருடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

விசாகம் : நிதானத்துடன் செயல்படவும்.
அனுஷம் : கல்வியில் கவனம் தேவை.
கேட்டை : குறை சொல்வதை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

வாக்குவன்மையால் இலாபம் அதிகரிக்கும். செலவுகளை குறைத்து சேமிப்பதில் நாட்டம் உண்டாகும். இணையதள பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணியில் உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மூலம் : இலாபம் அதிகரிக்கும்.
பூராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

தொழில் சம்பந்தமான புதிய நுணுக்கங்களை கற்பீர்கள். சாதுர்யமான பேச்சுகளால் அனைவரையும் கவர்வீர்கள். பொருளாதார மேன்மைக்கான முயற்சிகள் மேன்மையை தரும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : தொழில் நுணுக்கங்களை கற்பீர்கள்.
திருவோணம் : சிறப்பான நாள்.
அவிட்டம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

எண்ணிய செயலை எண்ணியப்படியே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த தனவரவு திருப்திகரமாக இருக்கும். பொருளாதார முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். வீண் வாதங்களை தவிர்க்கவும். புத்துணர்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அவிட்டம் : தனவரவு உண்டாகும்.
சதயம் : இன்னல்கள் நீங்கும்.
பூரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தனவரவு மேம்படும். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தினருடன் விருந்துகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். ஆடைச்சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வாக்குவன்மையால் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
உத்திரட்டாதி : தனவரவு மேம்படும்.
ரேவதி : புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•