☘? முத்தமிழ் டிவி ?☘
☘தமிழை நேசி தமிழை சுவாசி ☘
?இன்றைய ராசிபலன்கள்?
☘புதன்☘☘26.09.2018.☘விளம்பி – புரட்டாசி.10.
⚡மேஷம்
வியாபாரத்தில் விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். வாகன வசதிகள் பெருகும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : எண்ணங்கள் ஈடேறும்.
பரணி : வசதிகள் பெருகும்.
கிருத்திகை : இன்பமான நாள்.
⚡ரிஷபம்
பணி நிமிர்த்தமான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தடைபட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் முனைவோர்க்கு சாதகமான நாள். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
ரோகிணி : ஆதரவு பெருகும்.
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
⚡மிதுனம்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் அமையும். செய்தொழிலில் நீங்கள் செய்யும் புதிய மாற்றங்களினால் இலாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மிருகசீரிஷம் : தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
திருவாதிரை : பலவீனத்தை உணர்வீர்கள்.
புனர்பூசம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
⚡கடகம்
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் அமைதியாக நடந்து கொள்ளவும். சகோதரர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் அமையும். திருமண முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : ஆதரவு அதிகரிக்கும்.
பூசம் : விவாதங்களை தவிர்க்கவும்.
ஆயில்யம் : எண்ணிய இலாபம் கிடைக்கும்.
⚡சிம்மம்
கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எண்ணிய செயலை பல தடைகளை கடந்து முடிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும். முடிவுகளை எடுக்கும் முன் பெரியவர்களிடம் தகுந்த ஆலோசனையை கேட்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : தடைகளை களைவீர்கள்.
பூரம் : புதிய அனுபவம் கிடைக்கும்.
உத்திரம் : பொறுப்புகள் உயரும்.
⚡கன்னி
பணியில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். பணியில் முக்கிய பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து சுபச் செய்திகள் வரும். பணியில் நிம்மதியான சூழல் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
அஸ்தம் : புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.
சித்திரை : வெற்றி உண்டாகும்.
⚡துலாம்
வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். செய்தொழிலில் செல்வாக்கு உயரும். அரசு வேலைகளில் இருந்து வந்த தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். சாமர்த்தியமாக பேசி எண்ணிய காரியத்தை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
சித்திரை : இலாபம் உண்டாகும்.
சுவாதி : செல்வாக்கு உயரும்.
விசாகம் : மதிப்பு கிடைக்கும்.
⚡ விருச்சிகம்
மேலதிகாரிகளிடம் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். முக்கிய முடிவுகளை பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து எடுக்கவும். சக பணியாளர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். பயணங்களில் நிதானம் தேவை.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : நிதானம் வேண்டும்.
அனுஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.
கேட்டை : உடல்நலத்தில் கவனம் வேண்டும்.
⚡தனுசு
சுப முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எதிர்பாராத வருகையால் கலகலப்பான சூழல் அமையும். தனவரவுகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : முயற்சிகள் கைகூடும்.
பூராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்
⚡மகரம்
எதிர்பார்த்த கடனுதவிகள் சாதகமாக அமையும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகளும், பணியில் மாற்றமும் உண்டாகும். சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளால் சாதகமான சூழல் ஏற்படும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : கடனுதவிகள் சாதகமாக அமையும்.
திருவோணம் : பணியில் மாற்றம் உண்டாகும்.
அவிட்டம் : அங்கீகாரம் கிடைக்கும்.
⚡கும்பம்
உறவினர்களிடம் கோபப் பேச்சுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த வேலைகள் முடிவதில் காலதாமதம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மற்றவர்களின் செயல்களில் தலையிட வேண்டாம்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : கோபமானப் பேச்சுகளை தவிர்க்கவும்.
சதயம் : காலதாமதம் உண்டாகும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.
⚡மீனம்
கல்வி கற்கும் மாணவர்களுக்கு மேன்மை உண்டாகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான புதிய நுணுக்கங்களை கற்பீர்கள். பிள்ளைகள் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : மேன்மை உண்டாகும்.
உத்திரட்டாதி : புதிய நுணுக்கங்களை கற்பீர்கள்.
ரேவதி : அனுகூலமான நாள்.
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘
