*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆடி 29_*

*_14.08.2018_*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

குடும்ப பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய வேலைக்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு

அசுவினி : முன்னேற்றமான நாள்.
பரணி : ஒற்றுமை அதிகரிக்கும்.
கிருத்திகை : சுபச் செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

மனதில் ஒருவிதமான குழப்பம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். தொழிலை விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். வாகனப் பயணங்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : நிதானம் வேண்டும்.
ரோகிணி : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
மிருகசீரிடம் : முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் திருப்தியான சூழல் உண்டாகும். செய்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் அமையும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிடம் : ஆசைகள் நிறைவேறும்.
திருவாதிரை : திருப்தியான சூழல் அமையும்.
புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். பணியில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். தொழிலில் வருவாய் அதிகரிக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : தனவரவுகள் கிடைக்கும்.
பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

செய்யும் பணியில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். வாடிக்கையாளர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். வாகனச் சேர்க்கை உண்டாகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : இன்னல்கள் குறையும்.
பூரம் : தெளிவு பிறக்கும்.
உத்திரம் : அன்பு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

எண்ணங்கள் ஈடேறும். பொருளாதாரம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். தடைபட்டு வந்த சுபச் செயல்கள் நடைபெறும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.
அஸ்தம் : அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
சித்திரை : ஒற்றுமை மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

வாகனப் பயணங்களில் வேகத்தை குறைக்கவும். நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். தம்பதிகளுக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதால் சுபிட்சம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை

சித்திரை : பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும்.
சுவாதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.
விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். முயற்சிக்கேற்ற அங்கீகாரமும், பதவி உயர்வும் கிடைக்கும். பணியில் சக ஊழியர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சாதகமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : மனக்கசப்புகள் நீங்கும்.
அனுஷம் : உயர்வு உண்டாகும்.
கேட்டை : முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

மனதில் தோன்றும் தேவையில்லாத எண்ணங்களால் சரியான முடிவை எடுப்பதில் காலதாமதம் ஏற்படும். தொழில் கூட்டாளிகளுக்கு இடையே அமைதிப்போக்கினை கடைபிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் சில இன்னல்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : முடிவுகளில் காலதாமதம் ஏற்படும்.
பூராடம் : அமைதியை கடைபிடிக்கவும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளால் தொழில் வகை ஆதாயம் உண்டாகும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தொழிலில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். திடீர் யோகத்தால் எதிர்பாராத செயல்கள் நடைபெறும். கடன் தொல்லைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் : பிரச்சனைகள் நீங்கும்.
அவிட்டம் : தொல்லைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். இழந்த பொருட்களை மீட்பதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய நபர்களின் வருகையால் இன்பம் பெருகும். இன்று சந்திராஷ்டம தினம் என்பதால் எதிலும் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : வாய்ப்புகள் அமையும்.
சதயம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரட்டாதி : வெற்றி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவுகளிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். மருத்துவச் செலவுகள் குறையும். உத்தியோகத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். பிரிந்த நபர்கள் தானாக வந்து பேசுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

பூரட்டாதி : பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரட்டாதி : செலவுகள் குறையும்.
ரேவதி : ஒற்றுமை மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•