*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆடி 30_*
*_15.08.2018_*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
புதிய தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். திருமண வரன்கள் அமையும். வாகன வசதி மேம்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அசுவினி : தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும்.
பரணி : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
சமூகச் சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். உடன்பிறப்புகளிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பணியில் தேவையில்லாத அலைச்சல்களால் விரயம் ஏற்படலாம். மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : சாதகமான சூழல் அமையும்.
ரோகிணி : புரிதல் உண்டாகும்.
மிருகசீரிடம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
பேச்சுத்திறமையால் அனுகூலம் உண்டாகும். பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். உடல் சோர்வால் எடுத்த பணி நிறைவடைய காலதாமதமாகும். சுபச் செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். தாய், தந்தை பற்றிய கவலைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மிருகசீரிடம் : எண்ணங்கள் ஈடேறும்.
திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.
புனர்பூசம் : சுப விரயங்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
மக்கள் தொடர்பு துறையில் இருந்தவர்களுக்கு மேன்மை உண்டாகும். நண்பர்களின் ஆதரவால் தடைபட்ட செயல்கள் நிறைவடையும். புதிய நுட்பங்களை பற்றிய அறிவு மேம்படும். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.
பூசம் : சுபிட்சம் உண்டாகும்.
ஆயில்யம் : மாற்றங்கள் ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய நபர்களின் ஆதரவால் சுபிட்சம் உண்டாகும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. மனை சம்பந்தமான விவகாரங்களில் சிறு தடை, தாமதங்கள் நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : இலாபம் உண்டாகும்.
பூரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திரம் : செயல்பாடுகளில் தடை ஏற்படலாம்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
இசைக் கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற முன்னேற்றம் கிடைக்கும். புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். பயணங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.
அஸ்தம் : புதிய இலட்சியம் பிறக்கும்.
சித்திரை : இன்னல்கள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
தொழில் திறமையால் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
சித்திரை : மதிப்பு அதிகரிக்கும்.
சுவாதி : பொருட்சேர்க்கை உண்டாகலாம்.
விசாகம் : ஆரோக்கியம் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
தாய்மாமன் உறவுகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இயந்திரம் சம்பந்தமான பணியில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதமும், அலைச்சலும் உண்டாகலாம். உத்தியோகஸ்தரர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அனுஷம் : அலைச்சல் ஏற்படும்.
கேட்டை : வேலைப்பளு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
பொதுக்கூட்ட பேச்சுகளால் ஆதரவு கிடைக்கும். வழக்குகளில் இழுபறியான நிலை உண்டாகும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். நீர்நிலையம் சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். கடன் தொல்லைகளால் மன வருத்தம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : இழுபறியான நிலை உண்டாகும்.
பூராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.
உத்திராடம் : கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொதுநலச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். புதிய முடிவுகளை எடுக்கும்போது பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். வாகனப் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவோணம் : கீர்த்தி உண்டாகும்.
அவிட்டம் : பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகலாம். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சந்திராஷ்டம தினம் என்பதால் செய்யும் பணியில் நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
அவிட்டம் : விவேகம் வேண்டும்.
சதயம் : மனச்சோர்வு உண்டாகும்.
பூரட்டாதி : வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் அமையும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். புதிய எண்ணங்கள் பிறக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தந்தையின் சொத்துகளில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.
உத்திரட்டாதி : ஆசிகள் கிடைக்கும்.
ரேவதி : சிக்கல்கள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
