
தேவையானவை:
பொடியாக நறுக்கிய முளைக்கீரை – 1 கட்டு
தேங்காய் துருவல் – 6 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
சீரகம் – 1 ஸ்பூன்
புளிக்காத தயிர் – ஒரு கப்
கடுகு – 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
தேங்காய், சீரகம் பச்சை மிளகாயை நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்.முளைக்கீரையை வேகவைத்து
கீரை வெந்ததும், உப்பு, தேங்காய் விழுது, தயிர் சேர்த்துக் கலக்கவும்.
எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்துக் சேர்த்துக் கலக்கவும்.
சுவையான முளைக்கீரை தயிர்க்கூட்டு ரெடி.
