
தேவையான பொருட்கள்:
மாங்காய் – 2
மிளகாய் தூள் – 6 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1 ஸ்பூன்
பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 200 கிராம்
செய்முறை:
முதலில் மாங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு ஜாடியில் போட்டு, உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் போட்டு தாளிக்க வேண்டும்.
பின்பு அதனை நறுக்கிய மாங்காய் துண்டுகளுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும். பின் அதனை ஒரு காட்டன் துணியால் காற்று புகாதவாறு நன்கு இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு அந்த பாட்டிலை ஒரு வாரத்திற்கு தினமும் இரண்டு முறை குலுக்க வேண்டும். ஒரு வாரம் ஆன பின்பு, அந்த பாட்டிலை 2 வாரத்திற்கு வெயிலில் தினமும் வைத்து எடுக்க வேண்டும்.
இந்த மாங்காய் ஊறுகாயை வெயிலில் வைத்து எடுத்தால், ஊறுகாய் நன்கு சுவையோடு நீண்ட நாட்கள் இருக்கும்.
