*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_புரடாசி 27_*

*_13.10.2018_*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

எந்தவொரு செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் மூலம் வீண் அலைச்சல்கள் உண்டாகலாம். திட்டமிட்ட பணிகளை செயல்படுத்துவதில் காலதாமதம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் அமையும். உடன் பணிபுரிபவர்களிடம் வீண் விவாதத்தை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : தைரியம் பிறக்கும்.
பரணி : அனுசரித்துச் செல்லவும்.
கிருத்திகை : விவாதத்தை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

தொழிலில் முன்னேற்றமான சூழல் அமையும். எதிர்பார்த்த தனவரவுகளால் மேன்மை உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தடைபட்ட செயல்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
ரோகிணி : மேன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் : வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பிள்ளைகள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். எடுத்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மனோ தைரியம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : சுபிட்சமான நாள்.
திருவாதிரை : எண்ணங்கள் ஈடேறும்.
புனர்பூசம் : தைரியம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

சகோதரர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். உயர் அதிகாரிகளின் உதவியால் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணியில் மேன்மை அடைவதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : ஆதாயமான நாள்.
பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
ஆயில்யம் : நன்மைகள் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். முக்கிய முடிவுகளை கலந்து ஆலோசித்து எடுக்கவும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் ஆதரவால் மாற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரம் : சாதகமான நாள்.
உத்திரம் : மாற்றமான சூழல் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

வியாபாரம் தொடர்பான எண்ணங்களும் அதற்கான முயற்சிகளும் மேம்படும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய வாய்ப்புகளால் சாதகமான சூழல் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். நண்பர்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : முயற்சிகள் மேம்படும்.
அஸ்தம் : வெற்றி கிடைக்கும்.
சித்திரை : எதிர்ப்புகள் அடங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். துரிதமான செயல்பாடுகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். கல்வியில் முன்னேற்றமான சூழல் அமையும். முயற்சிக்கேற்ற பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

சித்திரை : பொருளாதார நிலை உயரும்.
சுவாதி : கீர்த்தி உண்டாகும்.
விசாகம் : பாராட்டுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

மனதில் இருந்த கவலைகள் நீங்குவதற்கான சூழல் அமையும். சுப விரயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணிகளில் இருந்து வந்த தடை, தாமதங்கள் குறையும். எடுத்துச்செல்லும் பொருட்களில் கவனம் வேண்டும். தொழில் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : கவலைகள் நீங்கும்.
அனுஷம் : ஆரோக்கியம் மேம்படும்.
கேட்டை : பயணங்கள் சாதகமாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மற்றவர்களிடம் பேசும்போது கவனத்துடன் பேசவும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரிவினை நீங்கி ஒற்றுமை மேலோங்கும். எதிர்காலம் பற்றிய புதிய சிந்தனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : பேச்சில் கவனம் வேண்டும்.
உத்திராடம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

எதிர்பார்த்த பணவரவு சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்கள் மற்றும் இடமாற்றம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் உள்ள காலதாமதம் நீங்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் சக பணியாளர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகள் எண்ணிய பலனை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : இடமாற்றம் உண்டாகும்.
அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சுப விரயம் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் துறையில் முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். திட்டமிடலுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். நிர்வாகம் தொடர்பான முடிவுகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : சுப விரயம் உண்டாகும்.
சதயம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பூரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

உறவினர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத செய்திகளால் மாற்றமான சூழல் உண்டாகும். எதையும் சமாளிக்கும் திறன் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
ரேவதி : திறமைகள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•