*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஐப்பசி 25_*

*_11.11.2018_*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

செய்தொழிலில் மேன்மை அடைவதற்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுவீர்கள். சுயதொழில் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும். பயணங்களால் விரயச் செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அசுவினி : போட்டியில் வெற்றி கிடைக்கும்.
பரணி : பயணங்களால் மாற்றம் உண்டாகும்.
கிருத்திகை : ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

புதிய முயற்சிகளில் காரியத் தடங்கல்கள் உண்டாகும். சுயதொழில் புரிபவர்களுக்கு ஏற்பட்ட பணச்சிக்கல்கள் நீங்கும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் சுபச் செய்திகள் கிடைக்கும். சந்திராஷ்டம தினம் என்பதால் பெரியோர்களிடம் அமைதியுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

கிருத்திகை : முடிவுகளில் நிதானம் வேண்டும்.
ரோகிணி : பணச்சிக்கல்கள் நீங்கும்.
மிருகசீரிடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

அலைச்சல்களால் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். பொருட்களை கையாளும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். தொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மிருகசீரிடம் : சாதகமான சூழல் அமையும்.
திருவாதிரை : நிதானம் வேண்டும்.
புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். அறச் செயல்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

புனர்பூசம் : புதிய எண்ணங்கள் தோன்றும்.
பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
ஆயில்யம் : பதவி உயர்வு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளால் தனலாபம் கிடைக்கும். சாதகமான சூழல் அமையும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். பயணங்களில் கவனத்துடன் செல்லவும். எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மகம் : செயல்பாடுகளில் கவனம் தேவை.
பூரம் : தனலாபம் கிடைக்கும்.
உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

புதிய நபர்களின் அறிமுகத்தால் சாதகமான பலன்கள் கிடைக்கும். சாதுர்யமான பேச்சுகளால் இலாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பயணங்களால் இலாபம் கிடைக்கும். கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திரம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அஸ்தம் : இலாபம் உண்டாகும்.
சித்திரை : உறவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் தீட்டி அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பணியில் உள்ளவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு சாதகமான சூழல் அமையும். இளைய உடன்பிறப்புகளால் நன்மை உண்டாகும். போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும். புனித யாத்திரை செல்வதற்காக திட்டமிடுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : திறமைகள் வெளிப்படும்.
சுவாதி : காரியசித்தி உண்டாகும்.
விசாகம் : ஜெயம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

புதிய நபர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கூட்டாளிகளிடம் அனுசரித்துச் செல்லவும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். குறுகிய தூர பயணங்களால் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : பேச்சில் கவனம் தேவை.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : பயணங்களால் இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வசதி வாய்ப்புகளால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். பொருளாதார மேம்பாட்டிற்கான சிந்தனைகள் மேம்படும். பணிபுரியும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மூலம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூராடம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திராடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். அறப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். ஞான உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

உத்திராடம் : புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
திருவோணம் : கீர்த்தி உண்டாகும்.
அவிட்டம் : குழப்பங்கள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சமூக சேவை புரிபவர்களுக்கு புகழ் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அவிட்டம் : பாராட்டுகள் கிடைக்கும்.
சதயம் : வெற்றி கிடைக்கும்.
பூரட்டாதி : புதிய வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

மூத்த உடன்பிறப்புகளால் சாதகமான சூழல் உண்டாகும். புத்திரர்களால் முன்னேற்றமான சூழல் அமையும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : உடன்பிறப்பால் ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி : ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.
ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•