*_??முத்தமிழ் டிவி??_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆவணி 26_*
*_11.09.2018_*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
நீர் வழி தொழிலால் இலாபம் அதிகரிக்கும். கல்லூரி படிப்பிற்கான சுப விரயங்கள் உண்டாகும். புதுவித ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். உண்மையை உணர்ந்து மனம் அமைதி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அசுவினி : இலாபம் அதிகரிக்கும்.
பரணி : சுப விரயங்கள் உண்டாகும்.
கிருத்திகை : புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
பொதுக்கூட்டப் பேச்சுகளில் ஈடுபடுபவர்கள் கவனமாக பேசவும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
கிருத்திகை : பேச்சில் எச்சரிக்கை தேவை.
ரோகிணி : பாராட்டப்படுவீர்கள்.
மிருகசீரிடம் : ஜெயம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
பிறருக்கு எடுத்துரைக்கின்ற பேச்சுகளால் நற்பலன்கள் உண்டாகும். தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பொருள் சேர்ப்பதற்கு சாதகமான நிலை அமையும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
மிருகசீரிடம் : செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.
திருவாதிரை : இலாபகரமான நாள்.
புனர்பூசம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
இளைய சகோதரர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். மனதில் தோன்றும் தேவையற்ற குழப்பங்களால் சோர்வு அடைவீர்கள். கையாளும் பொருட்களில் கவனத்துடன் இருக்கவும். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : அமைதி காக்கவும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : எச்சரிக்கையுடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் இலாபம் கிடைக்கும். எண்ணிய காரியங்களில் சில காலதாமதம் உண்டாகும். திடீர் யோகத்தால் எதிர்பாராத செயல்கள் நடைபெறும். கணவன், மனைவிக்கிடையே உள்ள பிரச்சனைகள் குறைந்து உறவு நிலை மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மகம் : இலாபம் கிடைக்கும்.
பூரம் : காலதாமதம் உண்டாகும்.
உத்திரம் : உறவு நிலை மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவித முயற்சியால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுரங்க பணியாளர்கள் பணிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : எண்ணங்கள் மேலோங்கும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : எச்சரிக்கை வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
வாகனங்களால் இலாபம் உண்டாகும். உறவினர்களுக்கு இடையே உறவுநிலை மேம்படும். கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு கூடும். குடும்பத்தாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : பயணங்களால் இலாபம் கிடைக்கும்.
சுவாதி : உறவுநிலை மேம்படும்.
விசாகம் : சாதகமான சூழல் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். செயல்வேகம் அதிகரிக்கும். விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : பதவி உயர்வு கிடைக்கும்.
அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கேட்டை : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
கால்நடைகளால் சில விரயம் ஏற்படும். எதிர்பார்த்த வங்கி கடனுதவிகள் சாதகமாக அமையும். புண்ணிய தலங்களுக்கான யாத்திரையை மேற்கொள்வீர்கள். வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். கடனால் மன வருத்தம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : விரயம் ஏற்படும்.
பூராடம் : புனித யாத்திரை மேற்கொள்வீர்கள்.
உத்திராடம் : மன வருத்தம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
பொருள் வரவால் சேமிப்பு உயரும். பொதுக்கூட்ட பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் ஏற்படும். பணியில் மேன்மை அடைவதற்கான செயல்களை செய்வீர்கள். புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : சேமிப்பு உயரும்.
திருவோணம் : கீர்த்தி உண்டாகும்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
குடும்ப உறுப்பினர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். புதிய முடிவுகளை எடுக்கும்போது சிந்தித்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நிர்வாகத்தில் உங்களின் தனித்திறமை புலப்படும். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : தனலாபம் கிடைக்கும்.
சதயம் : தனித்திறமைகள் வெளிப்படும்.
பூரட்டாதி : பணிச்சுமை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
இளைய சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும். பொருளாதார மேன்மைக்கான உதவிகள் நண்பர்களின் மூலம் கிடைக்கும். துணிவுமிக்க வீர, தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். புத்திரர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும்.
ரேவதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
