*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_சித்திரை 28_*
*11.05.2019*
*_சனிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
மனதிற்கு மகிழ்ச்சி தரும் சுபச் செய்திகள் கிடைக்கும். வெளியூர் வேலை வாய்ப்புகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வேலையாட்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
அசுவினி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
பரணி : முன்னேற்றம் உண்டாகும்.
கிருத்திகை : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
திட்டமிட்ட முயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். மனதில் இருந்து வந்த பலவிதமான குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த தன உதவியால் கடன் பிரச்சனைகள் குறையும். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து அதை பூர்த்தி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
கிருத்திகை : பிரச்சனைகள் நீங்கும்.
ரோகிணி : கடன் குறையும்.
மிருகசீரிடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
வெளியூர் பயணங்களால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் மந்தநிலை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிடம் : செலவுகள் ஏற்படும்.
திருவாதிரை : சோர்வு உண்டாகும்.
புனர்பூசம் : தொடர்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்களின் உதவியால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு இன்பத்தை அளிக்கும். விருப்பமான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீர்வழி தொடர்பான பயணங்களால் பொருளாதார நிலை மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : ஆரோக்கியம் மேம்படும்.
பூசம் : இன்பமான நாள்.
ஆயில்யம் : பொருளாதாரம் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
மனதில் திட்டமிட்ட காரியத்தை துணிவோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். புதுவிதமான ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : வெற்றி காண்பீர்கள்.
பூரம் : உயர்வு உண்டாகும்.
உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
உறவினர்களின் வருகையால் மன மகிழ்ச்சி உண்டாகும். பயனற்ற எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளால் மன உளைச்சல்கள் ஏற்படும். சுரங்கம் தொடர்பான பணிகளில் இருப்பவர் சற்று கவனத்துடன் செயல்படவும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அஸ்தம் : மன உளைச்சல்கள் ஏற்படும்.
சித்திரை : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் மாற்றமான சூழலை உருவாக்கும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் சற்று குறையும். நிலுவையில் இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். உடன் பிறப்புகள் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நன்மை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சித்திரை : அறிமுகம் கிடைக்கும்.
சுவாதி : எதிர்ப்புகள் குறையும்.
விசாகம் :சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். ஆன்மீக பயணங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பொருளாதார மேம்பாட்டிற்கான செயல்பாடுகளில் அலைச்சலும், காலதாமதமும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
அனுஷம் : சிந்தித்துச் செயல்படவும்.
கேட்டை : பொருளாதாரம் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
உயர் அதிகாரிகளுடன் பேசும்போது சற்று நிதானம் வேண்டும். புதிய முயற்சிகள் மற்றும் உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் :சிவப்பு நிறம்
மூலம் : நிதானம் வேண்டும்.
பூராடம் : கவனம் வேண்டும்.
உத்திராடம் : எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
பணி நிமிர்த்தமான வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சிறு சிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். பெற்றோரின் ஆதரவுகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : புதுவிதமான அனுபவம் உண்டாகும்.
திருவோணம் : லாபம் அதிகரிக்கும்.
அவிட்டம் : நம்பிக்கை ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
பூர்வீக சொத்துக்கள் தொடர்பான சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப நபர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை அளிக்கும். பொன், பொருள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சி உண்டாகும்.
சதயம் : சுபிட்சமான நாள்.
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்கள் கூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : செயல்கள் காலதாமதமாகும்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : வெற்றி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
