*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_புரடாசி 24_*

*_10.10.2018_*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :*

மனதில் நினைத்த செயலை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். தந்தைவழி உறவுகள் மூலம் சாதகமான சூழல் நிலவும். எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : எண்ணங்கள் ஈடேறும்.
பரணி : வாய்ப்புகள் உண்டாகும்.
கிருத்திகை : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :*

புதிய முயற்சிகளின் மூலம் பாராட்டப்படுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உறவினர்களிடம் பேசும்போது நிதானம் வேண்டும். வியாபாரத்தில் பணியாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : பாராட்டப்படுவீர்கள்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிடம் : பொறுமையை கடைபிடிக்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :*

குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் மறையும். பொருட்சேர்க்கைக்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களைச் சந்தித்து மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இலாபகரமான சூழல் நிலவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
புனர்பூசம் : இலாபகரமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :*

தொழில் சார்ந்த பயணங்களால் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பழகவும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில மனவருத்தங்கள் நேரிடலாம். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :*

செய்யும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் மூலம் ஆதரவான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : பயணங்களில் கவனம் வேண்டும்.
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :*

கனிவான பேச்சுக்கள் சாதகமான பலனை அளிக்கும். எதிர்பார்த்த காரியம் முடிவதில் காலதாமதம் நேரிடலாம். சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். விவசாய பணிகளில் முயற்சிக்கேற்ற இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : அனுசரித்துச் செல்லவும்.
சித்திரை : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :*

புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தைரியமாக முடிவெடுப்பீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சக ஊழியர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் விலகும். தொழிலில் புதுவித முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
சுவாதி : கலகலப்பான நாள்.
விசாகம் : கவலைகள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :*

திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். நெருக்கமானவர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். முக்கிய முடிவுகளில் குடும்ப பெரியவர்களின் ஆலோசனையை கேட்கவும். செய்யும் பணிகளில் கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : வெற்றி கிடைக்கும்.
அனுஷம் : மதிப்பு உயரும்.
கேட்டை : ஆலோசனைகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :*

எதிர்பாராத பணவரவு உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் செயல்பாடுகளில் தலையிட வேண்டாம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும், இலாபமும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : தைரியம் அதிகரிக்கும்.
பூராடம் : ஆதாயம் உண்டாகும்.
உத்திராடம் : இலாபம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :*

தாய் வழி உறவுகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சிலருக்கு அவ்வப்போது பழைய நினைவுகளால் மனதில் குழப்பம் ஏற்படும். தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : சாதகமான பலன்கள் கிடைக்கும்.
திருவோணம் : அன்பு அதிகரிக்கும்.
அவிட்டம் : உதவி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :*

மன உறுதியுடன் செயல்படுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த சுபச் செயல்கள் கைகூடும். சகோதரர்களால் சிறிய அளவில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தொழிலில் திருப்தியான நிலை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

அவிட்டம் : சுபச்செயல்கள் கைகூடும்.
சதயம் : ஆதாயம் கிடைக்கும்.
பூரட்டாதி : திருப்தியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :*

சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடர்பான முக்கிய முடிவுகளில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கும். புதிய முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.
உத்திரட்டாதி : முடிவுகளில் கவனம் வேண்டும்.
ரேவதி : நிதானத்துடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•