*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆடி 20_*

*_05.08.2018_*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பேசும்போது சிந்தித்துப் பேசவும். பிள்ளைகள் உங்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அசுவினி : பேச்சில் கவனம் தேவை.
பரணி : அன்பு அதிகரிக்கும்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
ரோகிணி : சாதகமான நாள்.
மிருகசீரிடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

புதிய தொழில் தொடங்குவதற்கான உங்களது முயற்சிகள் வெற்றி அடையும். உறவினர்களின் ஆதரவால் தொழிலில் சில மாற்றங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்கள் உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிடம் : முயற்சிகள் ஈடேறும்.
திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.
புனர்பூசம் : நிதானமாக செயல்படுவது நல்லது.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் சில மனக்கசப்புகள் வந்து நீங்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

புனர்பூசம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
பூசம் : பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
ஆயில்யம் : மனக்கசப்புகள் வந்து நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் இலாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நபரை சந்தித்து மகிழ்வீர்கள். தொழில் முனைவோர்க்கு ஆதரவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
பூரம் : இலாபம் அதிகரிக்கும்.
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

குடும்பத்திற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காண்பீர்கள். தொழில் செய்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திரம் : அடிப்படை வசதிகள் மேம்படும்.
அஸ்தம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சித்திரை : பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

மன தைரியத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்ய முயல்வீர்கள். பிறருடைய பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

சித்திரை : மன தைரியத்துடன் செயல்படுவீர்கள்.
சுவாதி : இன்னல்கள் நீங்கும்.
விசாகம் : ஆலோசனைகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

முக்கிய பணிகளை பிறரை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நன்மையை தரும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். நண்பர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேற காலதாமதமாகும்.
அனுஷம் : நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
கேட்டை : தனவரவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலையுயர்ந்தப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெரிய மகான்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் இருந்த பழைய பிரச்சனைகளை தீர்க்க பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன மஞ்சள் நிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
உத்திராடம் : ஆசிர்வாதம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

உத்தியோகஸ்தரர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சிகள் ஈடேறும். மனை சம்பந்தமான சில விரயச் செலவுகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் மூலம் சாதகமற்ற சூழல் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : முயற்சிகள் ஈடேறும்.
திருவோணம் : திறமைகள் வெளிப்படும்.
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

மறைமுக எதிர்ப்புகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். உங்களின் செயலால் மற்றவர்கள் பயனடைவார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கனிவுடன் நடக்கவும். நெருக்கமானவர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : இன்னல்கள் குறையும்.
சதயம் : சிந்தனைகள் மேம்படும்.
பூரட்டாதி : கனிவுடன் நடக்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

திருமணப் பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். உத்தியோகஸ்தரர்களுக்கு செயல்வேகம் அதிகரிக்கும். உடல்நலம் மேம்படும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். உங்கள் மீதான நம்பிக்கை சீர்குலைவதற்கான சூழல் அமையலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

பூரட்டாதி : சுபிட்சமான நாள்.
உத்திரட்டாதி : செயல்வேகம் அதிகரிக்கும்.
ரேவதி : கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•