அதிரசம் செய்ய தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி – 1 கப்
  • வெள்ளம் – 3/4கப்
  • ஏலக்காய் – 2
  • நல்லெண்ணெய் – சிறிதளவு [கப்பின் அளவு சரியாக இருக்கவேண்டும்]

அதிரசம் செய்முறை :

              முதலில் ஒரு கப் பச்சரிசியை பாத்திரத்தில் 2 அல்லது 3 மணி நேரம் நன்றாக ஊற வையுங்கள். மூன்று மணி நேரத்துக்கு பிறகு,அந்த அரிசியினை 10 நிமிடம் அளவுக்கு காயவையுங்கள். அரிசியின் ஈரப்பதம் மொத்தமாக காயாமல் சற்று ஈரப்பதமாக இருக்கவேண்டும். இப்போது இந்த அரிசியினை மிக்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளுங்கள்.
              பிறகு, 3/4கப் வெள்ளத்தினை எடுத்து வாணலில் போட்டு அதனுடன் 1/4கப் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லப்பாகினை தயார் செய்து கொள்ளுங்கள். இப்போது அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவில் 2 ஏலக்காய் நசுக்கி அதனுடன் சேர்த்து கொள்ளுங்கள்.
              வெல்லப்பாகு சூடு ஆறுவதற்கு முன் நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பச்சரிசிமாவில் ஊற்றி நன்றாக கலக்குங்கள். அது சற்று கெட்டியாக இல்லாமல் தான் இருக்கும். ஆனால், அதன்மீது சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி 2 அல்லது 3 நாட்கள் அப்படியே ஒரு கின்னத்தில் மூடி வைக்கவும்.
               மூன்று நாட்களுக்கு பிறகு அதிரசமாவு சரியான பதத்தில் தயாராக இருக்கும். பிறகு வாணலில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து அதிரசமாவினை வட்டமாக தட்டி அந்த எண்ணையில் போட்டு எடுத்தால் அதிரசம் தயார். தீ அதிகம் இருந்தால் அதிரசம் மேல் பகுதி மட்டும் வெந்து இருக்கும் எனவே மிதமான தீயில் சிறிது நேரம் வேகவிட்டு அதிரசத்தினை எடுத்தால் சுவையாக இருக்கும்.